BSP Armstrong: ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலை மயானத்தில் தான் அடக்கம் செய்ய முடியும் - சென்னை உயர்நீதிமன்றம்

BSP Armstrong: ஆர்ம்ஸ்ட்ராங் உடலை குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய, சட்டவிதிகளை மீற முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

BSP Armstrong:  பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவரின் உடலை மயானத்தில் தான் அடக்கம் செய்ய முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்வதற்காக சட்ட விதிகளை மீற முடியாது எனவும் நிதிபதி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

வழக்கு விசாரணை ஒத்திவைப்பு:

இதுதொடர்பான மனு விசாரனைக்கு வந்தபோது, கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம் நெரிசல் முஇகுந்த பகுதி என கூறி அரசு தரப்பில் படங்கள் சமர்பிக்கப்பட்டன. மேலும், கட்சி அலுவலகம் உள்ள இடத்தில் இருந்து 1.5 கிமீ தொலைவில் ஒரு இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பேசிய நீதிபதி, 2,400 சதுர அடி நிலத்தை அரசு வழங்குகிறது அல்லவா? என கேள்வி எழுப்பினார். மேலும், மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் தான் உடலை அடக்கம் செய்ய முடியும். அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தில் மணிபண்டபம் கட்டிக்கொள்ளலாம். தற்போது பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடாது. அடக்கம் செய்ய வேறு ஏதேனும் இடம் இருந்தால் பரிந்துரை செய்யுங்கள் என கூறி, வழக்கு விசாரணை 10.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தின் கோரிக்கை என்ன?

ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்திலேயே அடக்கம் செய்ய, குடும்பத்தினர் சார்பில் சென்னை மாநாகராட்சியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், குடியிருப்பு பகுதியிலேயே உடலை அடக்கம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதாக கூறி மாநகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். அவர்களது கோரிக்கை அவசர வழக்காக விசாரிக்க அனுமதி  வழங்கப்பட்டது.

Continues below advertisement
Sponsored Links by Taboola