மத்திய அரசின் பெயரை ஒன்றிய அரசு என  மாற்றுவதால் எந்த பயனும் இல்லை, தமிழகத்திற்கான திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து பெறுவதே முக்கியம் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.


சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் பாமக சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 2021-22 ம் நிதி ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் காணொலி மூலமும் , கட்சியின் தலைவர் ஜி.கே.மணி நேரிலும் பங்கேற்றார்.


பின்னர் பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், “ஊடகத்தினர் ஆதரவு அளித்தால் அடுத்த 5 ஆண்டு காலத்தில் சட்டபேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வோம். அண்ணா பல்கலைக்கழகத்தை உயர் சிறப்பு கல்வி நிறுவனமாக மாற்றினாலும் மாநில அரசின் இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படும். இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படுமானால் மத்திய அரசின் நிதி தேவையில்லை.


பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வர வேண்டும். பெட்ரோல், டீசலை குறைப்போம் என்று சொன்ன திமுக இப்போது தேதி சொல்லவில்லை என்கிறார்கள். இது ஆக்கப்பூர்வமான கருத்து இல்லை. செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் ஓராண்டுக்கு 100 கோடி தடுப்பூசி தயாரிக்கலாம். கொரோனா பாதிப்பு அடுத்த 3 ஆண்டு இருக்கும்.


பெட்ரோல், டீசல் விலை உயர்வு : கண்டனம் தெரிவிக்க சைக்கிளில் சென்ற பிரேமலதா விஜயகாந்த்..!


இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை குறித்தும் செங்கல்பட்டு தடுப்பூசி மையம் குறித்தும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன். தமிழ்நாடு அரசு பொருளாதார குழு அமைத்தற்கு வரவேற்கிறேன். மத்திய அரசின் பெயரை மாற்றுவதால் எந்த பயனும் இல்லை, தமிழகத்திற்கான திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து பெறுவதே முக்கியம். தென்பெண்ணையில் கர்நாடக அரசு கட்டியுள்ள அணையை உடைக்க வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு கலந்துகொள்ள கூடாது.




மத்திய அரசின் பெயரை ஒன்றிய அரசு என  மாற்றுவதால் எந்த பயனும் இல்லை, தமிழகத்திற்கான திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து பெறுவதே முக்கியம். மேகதாது அணைக்கட்ட கூடாது என்பது தான் அனைவரின் நிலைப்பாடு, மேகதாது அணை தொடர்பாக பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு அரசு பங்கேற்க கூடாது. நீதிமன்றம் மூலமே இதற்கு  தீர்வு காண வேண்டும்” என்று கூறினார்.


மேலும், “வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. வழக்கு விசாரணையில் இருந்தாலும் தொடர்ந்து 69% இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளதை போல 10.5% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். 10.5% இட ஒதுக்கீடு சாதி பிரச்சனை இல்லை. இது சமூக நீதிக்கான பிரச்சனை. இந்த இட ஒதுக்கீட்டிற்காக பாமக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியுள்ளது” என்றும் கூறினார்.


L Murugan On Cauvery | "தமிழ்நாடுதான் வீணடிக்கிறது” - காவிரி நீர் குறித்த எல்.முருகன் கருத்துக்கு கே.எஸ் அழகிரி கண்டனம்..!