சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, "இந்திய விமானப்படை 92வது தூக்க நாள் விழாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை காண மக்களுக்கு, முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். அதன்படி லட்சக்கணக்கான மக்கள் கூடினர். அரசு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத காரணத்தால் லட்சக்கணக்கானூர் மெரினா பீச்சில் கூடியதால் கூட்டநெரிசலில் 5 பேர் உயிரிழந்தனர். அடிப்படை வசதிகள் இல்லாமல் துன்பத்திற்கு ஆளானார்கள். நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. முதலமைச்சரின் அறிவிப்பு காரணமாக தான் லட்சக்கணக்கானோர் கூடினார்கள். எவ்வளவு பேர் கூடுவார்கள் என்பதை உளவுத்துறை மூலம் தகவல் பெற்று தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் செய்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது.


முதலமைச்சரின் அறிவிப்பை நம்பி வந்த மக்களுக்கு துன்பம் தான் மீதம். அரசின் செயலற்றுத் தன்மை கையாளாகாத தன்மையை காட்டுகிறது இது வெட்கக்கேடான விஷயம். இதேபோன்று பல்வேறு இடங்களில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இதை அரசியல் ஆக்க வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகிறார். அரசு என்றால் மக்களை பாதுகாக்க வேண்டும்.


இதற்கு முழுபொறுப்பு முதலமைச்சர் ஸ்டாலின் தான் ஏற்க வேண்டும். ஏனென்றால் இவர் தான் அழைப்புவிட்டார். இது அரசின் அலட்சியம். ஒரு நிகழ்ச்சியை கூட நடத்த முடியாத அரசாக உள்ளது. அரசின் கவனக்குறைவால் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர், அமைச்சர்கள் பாதுகாப்பான இடத்தில் அமர்ந்து சாகச நிகழ்ச்சி பார்த்தனர் என்றும் கூறினார்.



மிகப்பெரிய கால்நடை பூங்கா அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அதற்கு தேவையான தண்ணீருக்காக தனி குடிநீர் திட்டம் கொண்டு வந்தோம். அதனை சிப்காட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்வது சரியா? இது விவசாயிகளுக்கான மிகப்பெரிய திட்டம். தமிழகத்தில் கால்நடை உற்பத்தி அதிகரிக்கவும், பால் உற்பத்தி அதிகரிக்கவும் இந்த ஆராய்ச்சி நிலையம் பயனுள்ளதாக இருக்கும்.


ஆனால் திமுக ஆட்சி இந்த ஆராய்ச்சி நிலையத்தையும், கால்நடை பூங்காவையும் திறக்கவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிய திறக்கப்படாமல் உள்ளது இது கண்டிக்கத்தக்கது. கால்நடைப்பூங்காவிற்கான தண்ணீரை சிப்காட்டுக்கு கொண்டு செல்வதை ஏற்க மாட்டோம்.


சட்டரீதியாக சந்திப்போம். அதிமுக ஆட்சி வரும்போது இதனை ரத்து செய்வோம் என்றும் தெரிவித்தார். டாஸ்மாக் அரசாங்க மூலம் விற்பனை செய்யப்படுவது போதைப் பொருள் என்பது கள்ளத்தனமாக விற்பனை செய்வது. அதிமுக ஆட்சியில் போதை பொருள் தடுப்பு கடுமையாக கட்டுப்பாட்டில் இருந்தது. திமுக ஆட்சி வந்தபோது அண்டை மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் எளிதாக கடத்தி வருந்து விற்பனை செய்கின்றனர்.


இதனால் இளைஞர்கள் மாணவர்கள் பாதிக்கப்படுவதை நான் தொடர்ந்து சட்டமன்றத்திலும் பேசி வருகிறேன். போதைப் பொருள் பயன்படுத்துவரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சேலத்தில் இப்போது ஊசி பயன்படுத்தும் காட்சிகள் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. செய்தியாளர் படம் பிடிக்கும்போது போதை ஊசி பயன்படுத்தும் இளைஞர்கள் ஓடும் காட்சிகள் அதிர்ச்சியளித்தது. இதுமட்டுமில்லாமல் போதை ஊசி பயன்படுத்திய இளைஞரின் கை தொலைக்காட்சியில் காட்டப்பட்டது வேதனை அளிப்பதாக இருந்தது. எனது சொந்த மாவட்டத்திலேயே போதைப்பொருட்கள் தடை இல்லாமல் கிடைப்பது வேதனை அளிக்கிறது. மாணவர்கள் இளைஞர்கள் போதைக்கு அடிமையானால் இந்த குடும்பம் சீரழிந்து விடும்


நாட்டின் நன்மையை கருதி இளைஞர்கள் மாணவர்கள் பொதுமக்கள் நன்மை கருதி போதை பொருள் விற்பனை தடுத்து நிறுத்துமாறு கேட்கிறேன். இதில் சம்பந்தப்பட்டவர்களை பிடித்தால் ஆளுங்கட்சியினர் அவர்களை விடுவிக்க செய்கிறார்கள். இப்படி இருந்தால் எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும்.


சமீபத்தில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். சிலரை கைது செய்தனர். இது போதாது. எனக்கு தெரிந்த கல்லூரி நிர்வாகம் கல்லூரி அருகில் போதை பொருள் விற்பதை புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னரும் மீண்டும் விற்பனை செய்யப்படுகிறது.


இதேபோன்று மீண்டும் மீண்டும் நடைபெற்று வருகிறது. போதை பொருள் விற்பனை கும்பலால் அவர் மிரட்டப்பட்டுள்ளார். எத்தனை தடவை பிடித்துக் கொடுத்தாலும் நாங்கள் விற்பனை செய்வோம் காவல்துறை அரசு அதிகாரிகள் எங்களுக்கு சாதகமாக உள்ளனர். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது, போதைக்கு அடிமையானவர்கள் தொடர்ந்து எங்களை நாடி தான் ஆக வேண்டும் என்று பகிரங்கமாக மிரட்டுகின்றனர். செயலற்ற அரசாங்கம் பொம்மை முதலமைச்சராகவும் இருப்பதால் தடுக்க முடியாத சூழ்நிலை தான் பார்க்க முடிகிறது என்று விமர்சனம் செய்தார்.


ஆசிரியர் பெருமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் பலமாதங்களாக வழங்கப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. வருங்கால இந்தியாவை உருவாக்கக்கூடிய மாணவர்களை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை முறையாக வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் கல்லூரியில் உள்ள பேராசிரியர்களுக்கு ஒரு வருடமாக சம்பளம் வழங்கப்படும் கண்டிக்கத்தக்கது


உடனடியாக நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.


மழை வடிகால் பணிகள் செய்வதற்கு 10 லட்சம் லஞ்சம் கேட்டது கண்டிக்கத்தக்கது. அதிமுக ஆட்சியில் சென்னையில் 2400 கிலோமீட்டர் மழை வடிகால் பணியில் 1240 கிலோமீட்டர் தொலைவிற்கு செய்து முடிக்கலாம். மீதமுள்ள பணிகளில் 40 மாத காலமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யாத அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். மழை வடிகால் பணி அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம்.20 சென்டிமீட்டர் மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்காது என்று கூறினார்கள். இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் பணிகள் முடிவு பெறவில்லை. வடகிழக்கு பருவ மழை கனமாக பெய்தால் சென்னை மிதக்கும் என்றும் கூறினார்.



இந்த மாநில மக்கள்தான் ஓட்டு போட்டு முதலமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த மாநிலத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் கடமை. அதிமுக ஆட்சியில் மெட்ரோ திட்டம் 110 கிலோமீட்டர் 63,000 கோடி மத்திய அமைச்சரை அழைத்து வந்து ஒப்புதல் பெற்றோம். முறையாக நிதி பெற்றிருந்தால் இத்திட்டத்தை முடித்து இருக்கலாம். முறையாக மத்திய அரசை அணுகி இருந்தால் உரிய நேரத்தில் நிதியை பெற்று எடுக்கமுடியும். அதிமுக ஆட்சியில் மத்திய அரசு இணக்கமாக இருந்தோம். கொள்கை என்பது வேறு.


அதிமுக ஆட்சியில் இருந்தபோது நாட்டு மக்களை கடனாளியாக ஆக்கிவிட்டதாக ஸ்டாலின் கூறினார். இப்போது திமுக 40 மாத ஆட்சியில்முதல் 3.5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர். என்ன பெரிய திட்டத்தை கொண்டு வந்தனர்.உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாக கூறினார்கள். இப்போது இந்தியாவில் உள்ள தொழில் அதிபர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று அங்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவது ஏமாற்று வேலை. வெளிநாடு சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு சென்றதாக மக்கள் பேசிக் கொள்கின்றனர். 19 புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரே வாரத்தில் போட்டு இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.


சனாதனம் குறித்து ஆந்திர துணை முதலமைச்சரும், இங்கு உள்ள துணை முதலமைச்சரும் கருத்து சொல்லி இருக்கிறார்கள். கருத்து மோதல் தான் சென்று கொண்டிருக்கிறது. இதற்கான இறுதி தீர்ப்பை மக்களே அளிப்பார்கள்" என்றும் கூறினார்.