தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி இருந்து வந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமலே இருந்து வந்தது, தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதற்கான பணிகளும், நடவடிக்கைகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பல்வேறு கட்சியினர்கள் தங்களுடைய வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் , கட்சி கூட்டணி குறித்தும் பல்வேறு அறிவிப்புகள் , அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். 




இந்த சூழலில் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடப்போவதாக முடிவு செய்துள்ளது.  நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் மூலம் தனது ஆதரவை பெருக்கி அதனை தற்போது விஜய் மக்கள் இயக்கமாக  மாற்றி  செயல்பட்டு வந்த இந்நிலையில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த தலைவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது, மற்றும் களநிலவரங்களை சமாளிப்பது குறித்த அறிவுரைகளும் வழங்கி வருகின்றனர். 




இதுகுறித்து தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் தலைவர் லெப்ட்பாண்டி ஏபிபி நாடு இணையத்திற்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில்  கூறுகையில், ‛‛நடிகர் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக தங்களது ரசிகர்களை ஒன்றிணைத்து தற்போது தேனி மாவட்டம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுமார் 25 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளதாகவும், தாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டால் முழுமையாக செயல்பட்டு ஒவ்வொரு வார்டுகளிலும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம் எனவும்,   தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் மாபெரும் வெற்றிபெரும் என கூறினார். மேலும் சில கட்சியினர்கள் தேர்தலின்போது வேட்பாளரை நிறுத்தி அறிவிப்புகள் வெளியிடும்போது நாங்கள் ஜெயித்தால் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று கூறி வெற்றி பெற்றபின் ஏமாற்றத்தையே மக்களுக்கு அளித்துள்ளார்கள்.




ஆனால் விஜய் மக்கள் இயக்கம் சார்ந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களும் தாங்கள் இதுவரை எந்த ஒரு எதிர்பார்ப்பும்  இல்லாத அளவுக்கு இதுவரை மக்களுக்கு செய்த நலத்திட்ட உதவிகளை கூறி தங்கள் ஆதரவுகளை மக்களிடம் திரட்டப் போவதாக கூறினார்.  தற்போது வரை விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது அதற்கான களநிலவர பணிகள் எவ்வாறு செய்வதென்ற எந்த ஒரு அறிவிப்பும் அறிக்கையும் தனக்கு வரவில்லை எனவும் விரைவில் தாங்கள் அதை எதிர்பார்த்து உள்ளதாகவும் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஒவ்வொரு வேட்பாளரும் அதிக வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெறுவார்கள் எனவும், விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாக தெரிவித்தார்.


 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*


 


 


தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்


 


Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!