அதிமுகவின் இரட்டை தலைமை குறித்தும், ஒற்றை தலைமை குறித்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் இடையேயான காரசாரமான உட்கட்சி போட்டிகள் இருக்கும் நிலையில் அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இபிஎஸ்-க்கு தேனி மாவட்டத்தில் அதிமுகவினர் மற்றும் இபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அதிமுக பிரமுகர்கள் ஒருவரின் திருமண விழாவிற்கு பங்கேற்பதற்காக இபிஎஸ் தேனி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவருக்கு பெரியகுளம் தேனி சாலையில் உள்ள மதுரா பகுதியில் கரகாட்டம் தேவராட்டம் என பல்வேறு தெரு நிகழ்ச்சிகள் மற்றும் அதிகமான அதிமுகவினர் கூடி எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ABP Nadu Exclusive: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் என்னதான் உள்ளது ? - ஹேப்பி நியூஸ் உள்ளே?
இந்த நிகழ்வில் வருகை தந்த இபிஎஸ் தேனியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது அதிமுகவை வழிநடத்த எம்ஜிஆர் அவர்களின் வழியில் செல்வோம் எனவும், நாம் தனி வழியில் சென்று செயல்படுவோம் எனவும் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் கனவை அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம் என பேசினார். பின்னர் இபிஎஸ் கம்பத்தில் உள்ள அதிமுக பிரமுகர்கள் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்