அதிமுகவில் மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ள சூழலில் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொது குழு செல்லாது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் செல்லாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.


FIFA WORLDCUP 2022: கோல்மழை பொழியவுள்ள கோலாகலமான உலகக்கோப்பை கால்பந்து திருவிழா இன்று தொடக்கம்..!




இதுதொடர்பாக வரும் 21ஆம் தேதி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு பதில் அளிக்க நீதிமன்றம் அதுவரை பொதுச் செயலாளருக்கு தடையும் விதித்தது. இந்த சூழலில் ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சென்று தொண்டர்களை சந்திப்பதற்கு முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் ஓ.பன்னீர்செல்வத்தை பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் பன்னை வீட்டில் சந்தித்து ஆசி பெற்றனர்.


Khushbu: 'தமிழு'க்கு பதில் 'தமில்' என பதிவிட்ட குஷ்பு..! கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்..




அதனை  தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக ஓபிஎஸ் ஆல் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்ட தருமர் தலைமையில் பன்னீர் செல்வத்தால் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட கழகம், ஒன்றிய கழகம், பேரூர் கழகம், நகர் கழகம் ஆகிய நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் பண்ணை வீட்டிற்கு வருகை தந்து பூ கொத்து கொடுத்து ஆதரவு தெரிவித்தனர்.


Bigg Boss 6 Tamil : தாக்கப்பட்டாரா அசிம்..? இன்றைய பிக்பாஸ் எபிசோடு தடாலடியாக இருக்கபோது..! ரசிகர்கள் ஆர்வம்..


Jeff Bezos: "அனாவசிய செலவை குறையுங்கள்..கையில் பணம் வைத்துக்கொள்ளுங்கள்.." அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் எச்சரிக்கை..!


இதனைத் தொடர்ந்து ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் சிறுவலூர் மாரப்பன் தலைமையில்,  ஓபிஎஸ் ஆல் புதிதாக நியமிக்கப்பட்ட நகர், ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்ட  நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கூறுகையில், ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய பொழுது அவருடன் ஆதரவாக இருந்த தங்களை கட்டம் கட்டி ஒதுக்கி  வைத்த  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை எதிர்த்து ஈரோடு மாவட்டத்தில் ஓபிஎஸ் இன் ஆதரவை பெருக்கி வருவதாக தெரிவித்தனர்.