அதிமுக நிறுவனர் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் வகுத்த சட்ட விதிகளின்படி தொண்டர்களே கட்சியின் தலைமையை தேர்ந்தெடுக்கவேண்டும், அறிவித்து நாளை மறுநாள் நடக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து எம்ஜிஆர் கையெழுத்துடன் ஓபிஎஸ்சின் சொந்த ஊரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: Zomato Executive Harrassed : ’இந்த உணவு தீண்டத்தகாதது’: ஜொமாட்டோ ஊழியரிடம் ஜாதியை சொல்லி துன்புறுத்திய கொடூரம்..



அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றை தலைமை கோரிக்கையும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் பன்னீர்செல்வம் தான் எனவும் , மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு ஆகையால்  பன்னீர்செல்வம் தான் ஒற்றை தலைமை வகிக்க வேண்டும் என அதிமுகவில் சர்ச்சைகள் வலுத்து வரும் சூழலில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம், தேனி உள்ளிட்ட மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆரின் கையெழுத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.


Agnipath LIVE: அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெற முடியாது - பாதுகாப்பு அமைச்சகம் திட்டவட்டம்




Ilayaraja : தனுஷுக்கு இப்படி ஒரு பாராட்டா? : ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய இளையராஜா.. களைகட்டிய ராஜா கேள்விகள்..


அந்த சுவரொட்டிகளில் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் அவர்களின் கழக சட்ட விதிப்படி தொண்டர்களே கட்சியின் தலைமையை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதி முறைகளை தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி மாற்ற முயற்சிக்கும் தீய சக்திகளுக்கு எங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம் எனவும், தொண்டர்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் 23ஆம் தேதி சென்னையில் நடக்கும் பொது குழுவிற்கு தமிழகம் முழுவதும் இருக்கும் லட்சக்கணக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் படை எடுப்போம் என்றும், தொண்டர்களே கட்சியின் பொதுச்செயலாளரை தேர்வு செய்வார்கள் என்றும் அடங்கிய வாசகங்கள் இடம் பெற்றுள்ள சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகளை எந்த ஆதரவாளர்கள் ஒட்டினார்கள் என்பது தெரியாத வகையில் இவன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உண்மை தொண்டன் என குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது அதிமுக நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண