Agnipath LIVE: அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெற முடியாது - பாதுகாப்பு அமைச்சகம் திட்டவட்டம்
Agnipath Scheme LIVE Updates: அக்னிபத் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தியாளர் சந்திப்பு..
நுழைவு-நிலை தகுதி, தேர்வு பாடத்திட்டம் அல்லது மருத்துவ தரநிலைகள் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை. விமானப்படையில் அனைத்து சேர்க்கைகளும் அக்னிவீர் வாயு மூலம் மட்டுமே நடைபெறும் - ஏர் மார்ஷல் சுராஜ் குமார்
இந்திய விமானப் படையில் ஒவ்வொரு சேர்க்கையும் இனி 'அக்னிவீர் வாயு' மூலம் மட்டுமே நடைபெறும் - ஏர் மார்ஷல் சுராஜ் குமார்
ஐந்தாம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 6,000 ஆகவும், 10 ஆம் ஆண்டில் 9,000-10,000 ஆகவும் இருக்கும் - ஏர் மார்ஷல் சுராஜ் குமார்
அக்னிபத் திட்டத்தில் முதல் ஆண்டில் 2%ஆக தொடங்கி படிப்படியாக ஆட்கள் சேர்க்கப்படுவார்கள் - ஏர் மார்ஷல் சுராஜ் குமார்
நமது இளைஞர்களில் 50% பேர் 25 வயதுக்குட்பட்டவர்கள். இராணுவம் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் -ஜெனரல் அனில் பூரி
இது நமது தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். அக்னிவீரர் திட்டத்திற்கு ராணுவத்தின் பழைய ஆட்கள் அனுப்பப்படுவார்கள் என்று யாரோ வதந்தி பரப்பினார்கள். இது போலியான தகவல் - ஜெனரல் அனில் பூரி
ஆட்சேர்ப்பு நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. படைப்பிரிவு செயல்முறை மாறாமல் இருக்கும் - ஜெனரல் அனில் பூரி
ராணுவத்தில் இளம் வீரர்கள் இடம்பெறுவது, தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்கள் சேவை செய்வது, தனி நபரின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது ஆகிய 3 விஷயங்களை அக்னிபத் திட்டம் உறுதி செய்கிறது - ஜெனரல் அனில் பூரி
அக்னிபத் திட்டம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்து வருகிறது.
அக்னிபத் திட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிடித்தம் செய்யப்படும் ரூ.5.02 லட்சம் சேவா நிதிக்கு செல்லும். அதே அளவு நிதியை மத்திய அரசும் செலுத்தும். இதன்மூலம் வட்டியுடன் சேர்த்து ரூ.11.71 லட்சம் பயிற்சி பெறுபவர்களுக்கு கிடைக்கலாம்
முதல் ஆண்டில் சம்பளமாக ரூ.30,000( பிடித்தம் போக ரூ.21,000), 2 ஆம் ஆண்டில் ரூ.33 ஆயிரம் (பிடித்தம் போக ரூ.23,100), 3 ஆம் ஆண்டில் ரூ.36,500 (பிடித்தம் போக ரூ.25,580), 4 ஆம் ஆண்டில் ரூ.40,000 (பிடித்தம் போக ரூ.28,000) வழங்கப்படும்.
இந்த 4 ஆண்டுகால பணிக்கு பின் பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் சேவா நிதி பேக்கேஜ் வழங்கப்படும். இது வட்டியுடன் சேர்த்து 11.71 லட்சம் ரூபாயாக கிடைக்க வாய்ப்புள்ளது.
அக்னிபத் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு இதில் இணைபவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதன்பின் இந்த பேட்ச்சில் இருந்து 25% பேர் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்
அக்னி வீர் என அழைக்கப்படும் இந்த வீரர்களுக்கு சம்பளம், இதர படி என அனைத்து வழங்கப்படும். குறைந்தது 17 வயது முதல் அதிகப்பட்சமாக 21 வயது வரையுள்ள இளைஞர்கள் இதில் சேர்க்கப்படுவார்கள்.
ஆண்டுக்கு சுமார் 45 ஆயிரம் இளைஞர்கள் இதில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், இவர்கள் 4 ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரிவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், அதிகப்படியான இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்கும் வகையிலும் அக்னிபத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
Background
புதிய அக்னிபாத் திட்டத்தின் கீழ் முதல் ஆண்டில் 3,000 'அக்னிவீரர்களை' கடற்படை சேர்க்கும் என மேற்கு கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மூன்று படைத் தலைவர்கள் இணைந்து 'அக்னிபத்' இராணுவத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு, உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் ”இந்தத் திட்டத்தின் கீழ் ஆயுதப் படைகளில் நான்கு ஆண்டு சேவையை நிறைவு செய்யும் 'அக்னிவீரர்கள்' துணை ராணுவப் படைகள் மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “அக்னிபத் யோஜனா இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு மற்றும் வரவேற்கத்தக்க முடிவு. இந்த நிலையில், இன்று, (மத்திய ஆயுதக் காவல் படைகள்) Central armed police force - CAPF மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் பணியமர்த்துவதற்கு இந்தத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் நிறைவு செய்யும் அக்னிவீரர்களுக்கு முன்னுரிமை அளிக்க உள்துறை அமைச்சகம் (Ministry of home affairs) முடிவு செய்துள்ளது
இந்த நடவடிக்கையானது ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற இளைஞர்கள், தேசத்தின் சேவை மற்றும் பாதுகாப்புக்கு மேலும் பங்களிக்க உதவும்.
"இந்த முடிவைப் பற்றிய விரிவான திட்டமிடல் ஏற்கனவே தொடங்கிவிட்டது," என்று உள்துறை அமைச்சர் மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறினார்.
பெண்கள் உட்பட ராணுவ வீரர்களை நான்காண்டுகளுக்கு மட்டுமே பணியமர்த்தும் ‘அக்னிபத்’ திட்டம் கடந்த செவ்வாய் அன்று அறிவிக்கப்பட்டது, மற்றொரு சுற்று ஸ்கீரினிங்கிற்குப் பிறகு அவர்களில் 25 சதவிகிதம் பேரை மேலும் 15 ஆண்டுகளுக்கு வழக்கமான கேடரில் தக்கவைத்துக்கொள்ளலாம். ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்துதல் மற்றும் பிற துறைகளில் வேலைவாய்ப்பிற்காக திறமையான மற்றும் ஆற்றல்மிக்க பணியாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பு செய்பவர்கள் 'அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள் மற்றும் அவர்களின் சீருடையின் ஒரு பகுதியாக ஒரு தனித்துவமான சின்னத்தையும் அணிவார்கள். என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -