டாஸ்மாக் கடையை திறக்காதீங்க...! ஊழியர்களின் காலில் விழுந்த எம்.எல்.ஏ!

டாஸ்மாக் கடை ஊழியர்கள் காலில் விழுந்து கடையை இடமாற்றம் செய்யுங்கள் என கெஞ்சி கேட்டுக்கொண்டார்.

Continues below advertisement

சேலம் மேற்கு தொகுதியில் உள்ள முத்துநாய்கன்பட்டியில் டாஸ்மார்க் மதுபான கடை நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் பல்வேறு தொந்தரவுகளுக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அப்பகுதியை கடந்து செல்லும் போது குடிபோதையில் சிலர் டாஸ்மாக் அருகிலேயே குடிபோதையில் விழுந்து கிடக்கின்றனர். அப்பகுதி மக்கள் இந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடையை மூட கேட்டு ஒருமாதம் முன்பு பாமக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Continues below advertisement

அப்பொழுது மாவட்ட மேலாளர், ஒருமாதத்தில் கடையை மூடுகிறோம் என எழுதிக் கொடுத்ததினால் போராட்டம் தற்காலிகமாக ஒருமாதம் ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று ஒரு மாதம் நிறைவடைந்ததால், மக்களோடு டாஸ்மாக் கடைக்குச் சென்ற சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், ஒரு மாத கால கேடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. எனவே உடனடியாக டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டார். இப்போது டாஸ்மாக் கடை ஊழியர்கள் காலில் விழுந்து கடையை இடமாற்றம் செய்யுங்கள் என கெஞ்சி கேட்டுக்கொண்டார். உடனடியாக அங்கிருந்து சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆதரவாளர்கள் அவரை எழுந்திருக்குமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களின் கோரிக்கை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் அருள் அங்கிருந்து கிளம்பி சென்றார். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Continues below advertisement
Sponsored Links by Taboola