தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைத்து ஓராண்டை நிறைவு செய்துள்ளது. ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து, சாதனை பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.




திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் பகுதியில் நேற்று நடைபெற்றது. திமுகவின் மாவட்ட கழக பொறுப்பாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான  பொன். முத்துராமலிங்கம் மற்றும் தலைமை கழக பேச்சாளர் துறையூர்.துரைபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். 




Arputhammal Interview: "31 ஆண்டுகால போராட்டத்தை அறிவீர்கள்.. என்ன பேசுவதென்றே தெரியவில்லை” - உணர்ச்சிப்பெருக்கில் அற்புதம்மாள்


 


தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் பொதுக்கூட்டத்தில் பேசிய போது, கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தங்கமணி முதல் எடப்பாடி வரை கொண்டு சேர்ந்ததாகவும், மக்களுக்கு எந்தத் திட்டத்தையும் அதிமுக கொண்டுபோய் சேர்க்கவில்லை  என விமர்சித்தார். திமுக ஆட்சியில் யாருக்காக திட்டம் உருவாக்கப்பட்டதோ அவர்களிடம் அந்த திட்டங்களை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்  கொண்டு போய் சேர்த்திருப்பதாக கூறினார். பாஜகவில் அண்ணாமலை என்பவர் புதிதாக வந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் , அவர் அண்ணாமலையும் இல்லை , ஆன மலையும் இல்லை , அது பொய் மான் கரடி எனவும், வெகுசீக்கிரம் அது நிறுபனம் ஆகும் என்றும் தெரிவித்தார்.




Perarivalan: "எல்லாத்துக்கும் காரணம் அம்மாதான்.." நெகிழ்ந்த பேரறிவாளன்.. கண்கலங்கிய அற்புதம்மாள்..!


மேலும் தொடர்ந்து பேசியவர், தமிழக ஆளுநர் பதவி வம்பிழுத்து விடும் வில்லன் பதவி போன்று ஆகி விட்டது என்றும், பிரச்சனைகளை உருவாக்குவதற்கு மத்திய அரசால் ஆளுநர் பதவி பயன்படுத்தப்படுகிறது எனவும் விமர்சித்தார். மத்திய அரசின் கெடுபிடி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடியிலும் மத்தியிலும் நம்முடைய தமிழக முதல்வர் ஸ்டாலின் மிக தெளிவாக ஆட்சி சக்கரத்தை சுழற்றிக் கொண்டு இருக்கிறார் எனவும் கூறினார். முன்னதாக பேசிய திமுக நிர்வாகிகள் பலரும் கடந்த ஓராண்டில் மாவட்டத்தில் செய்யப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மக்களிடையே எடுத்து கூறினர். தொடர்ந்து கூட்டத்தின் நிறைவில் கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்களுக்கு தென்னை மரம் கன்று, மற்றும் அலுமினியம் பாத்திரங்கள் வழங்கப்பட்டது. 


Perarivalan case: காலம் தாழ்த்திய ஆளுநர்.. பேரறிவாளனை விடுதலை செய்த உச்சநீதிமன்றம்..