திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆண்டுக்கு 1 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது, இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கடந்த 8 மாத காலத்தில் ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, இதில் நெல்லை மண்டலத்தில் இருக்கும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 5349 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது, ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்திற்குட்பட்ட நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 423 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது, இதில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 1154 மின் இணைப்புகளும், தென்காசி மாவட்டத்தில் 2769 மின் இணைப்புகளும் அடங்கும், குமரி மாவட்டத்தில் 301 விவசாய இணைப்புகளும், விருதுநகர் மாவட்டத்தில் 874 மின் இணைப்புகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 757 விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக நெல்லை மண்டல மின் பகிர்மானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து விவசாயிகளுடன் காணொலி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது, காணொளி காட்சி மூலம் நெல்லை வண்ணாரப்பேட்டை தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை நெல்லை மண்டல மின் பகிர்மான கழகம் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர், நெல்லை மாநகராட்சி மேயர், துணைமேயர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் விவசாயிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இலவச மின்சாரத்திற்காக காத்திருந்த தற்போது 2013 ஆம் ஆண்டு வரை விண்ணப்பித்த அனைவருக்கும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அப்பாவு பேசுகையில், இந்த நாட்டில் முதல் குடிமகன் விவசாயி தான், அவர்கள் இல்லையென்றால் எதுவுமே இல்லை, விவசாயிகள் பிரச்சினை என வந்தால் அதனை தீர்க்க வழி காண வேண்டுமே தவிர அவர்களை அலைய விட கூடாது, சாமானியர்கள், விவசாயிகளின் குறைகளை தீர்க்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது, வட்டியில்லா கடன் தருகிற மாநிலம் இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் நமது முதல்வர் தருகிறார், நெல் கொள்முதல் நிலையங்களில் செல்போன் மூலம் ஆன்லைனில் நெல்லை விற்று வங்கி கணக்கில் பணம் வரும் வாய்ப்பை முதல்வர் ஏற்படுத்தி உள்ளார், கடந்த ஆட்சியில் விவசாயிகளின் கடன் ரத்து என அறிவிக்கப்பட்டது, ஆனால் நிதி ஒதுக்கப்படவில்லை,
முதல்வர் ஸ்டாலின் 12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி விவசாய கடன் அனைத்தையும் ரத்து செய்தார், 15 லட்சம் பேர் விவசாய கடன், 5 பவுன் நகைக்குப்பட்ட கடன் என அனைத்தையும் ரத்து செய்து உள்ளார் முதல்வர், விவசாயிகள், சாமானியர்கள், ஏழைகளை பற்றி சிந்திக்கின்ற முதல்வர் ஸ்டாலின் சொன்னதை செய்கின்ற வண்ணமாக 1 லட்சம் மின் இணைப்புகள் தமிழக வரலாற்றிலேயே இதுவரை 10 மாத காலத்திற்கு கொடுத்த வரலாறு இல்லை, இது தான் அந்த வரலாறு, இது இன்னும் தொடரும் என முதல்வர் பேசியிருக்கின்றார், தொடர்ந்து செய்து தருவார் என பேசினார், இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்