கடந்த 2019 ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 2.5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மொத்த அமைச்சரவையும் மாற்றப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, அமைச்சரவை மாற்றப்பட்டது. 25 அமைச்சர்களில், முன்னரே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 11 அமைச்சர்களும், புதியதாக நியமிக்கப்பட்ட 14 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். அப்படிப் புதிதாக நியமிக்கப்பட்ட 14 அமைச்சர்களில் நடிகை ரோஜாவும் இடம்பெற்றிருந்தார். ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏ வாக இருக்கும் நடிகை ரோஜா கடந்த முறையே அமைச்சரவையில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இடம் அளிக்கவில்லை.



பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் கோயிலில் ஆந்திரா மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், ஆந்திர மாநிலத்தில் அமைச்சரவையில் இடம் கிடைத்ததற்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. தாய் வீடான ஆந்திராவில் எனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க பிராத்தனை செய்தார்கள், அதே போல் தமிழ்நாடு எனக்கு மாமியார் வீடு இங்கேயும் எனக்காக அனைவரும்  பிரார்த்தனை செய்தார்கள், அதற்காக அனைவருக்கும் நன்றி, 


நான் முதல் படம் நடித்தது முதல் தற்பொழுது வரை ஆண்டுதோறும் காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்வேன், என்னோட வேண்டுதலை அம்பாள் நிறைவேற்றியுள்ளார், அதற்கு பிரார்த்தனையாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும்  சென்று பிரார்த்தனை செய்ய உள்ளேன். எந்த ஒரு காரியம் செய்தாலும் காஞ்சி காமாட்சி அம்மனை வணங்கிய பின்தான் நான் தொடங்குவேன். எனது தாய் வீடான  ஆந்திரா மக்களுக்கும், எனது மாமியார் வீடுடான தமிழக மக்களும் நான் அமைச்சராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும்  அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.




அமைச்சர் மற்றும் நடிகை ரோஜா காமாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்ததை பார்த்த பொதுமக்கள் அவரிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டனர் மேலும் அவருக்கு வாழ்த்துக்களை பொதுமக்கள் தெரிவித்தனர்.


மேலும் படிக்க:ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் திரும்பி பார்க்க வைத்த அல்லூரி சீதாராமராஜூ - யார் இவர்?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண