மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தில் வெற்றியை தோல்வியை ஒரு நாட்டின் ஒரு இயக்கத்தின் போக்கை மாற்றிவிட முடியாது, காங்கிரஸை போன்ற 100 ஆண்டு கட்சி பல முறை பின்னடைவை சந்தித்து உள்ளது. ஏராளமான முறை வெற்றி பெற்றுள்ளது.
இந்த பின்னடைவு மூலம் மேலும் எங்களை எப்படி வழி நடத்திக்கொள்வது என்று அறிந்து கொள்கிறோம், எனவும் இதில் தங்களுக்கு சிரமம் இருப்பதாக தெரியவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து நின்று செயலாற்று வேண்டும் என்றும் சொல்லிருப்பது வரவேற்க பட வேண்டிய ஒன்றாகும். ஏற்கனவே மதசார்பற்ற கூட்டணி என்பது இந்தியாவின் உள்ள அனைத்து இடதுசாரிகளையும், முற்போக்காளர்கள், ஜனநாயக சக்திகளை ஒன்றுதிரட்டித்தான் செய்து வருகிறோம். ஆகையால் திருமாவளவன் கருத்து ஏற்புடையது, அது வெற்றியடையும் என்றார்.
சென்னை மாநகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நபர் ஒரு கிறிஸ்தவர் என்றும், அவர் பட்டியல் இன மக்களின் இட ஒதுக்கீட்டை அபகரித்து விட்டதாகவும், இது போன்று பல இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் கிறிஸ்தவர்களாக இருந்து கொண்டு பட்டியல் இன மக்களின் இடங்களை கைப்பற்றியுள்ளனர் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ள குற்றச்சாட்டு, பதில் அளித்த கே.எஸ்.அழகிரி, அர்ஜுன் சம்பத் போன்றவர்களின் ரத்தத்திலேயே இதுபோன்று சிந்தனைதான் ஊறியுள்ளது என்றும், அனைவரையும் ஸ்கேன் செய்து பார்ப்பது தவறானது, அவர்களின் சான்றிதழ்களில் பட்டியல் இனத்தவர் என்று உள்ளது, அதன் அடிப்படையில் தான் தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. அதன் பின்னர் அவர்கள் எந்த பிரிவு சார்ந்தவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்கள் என மக்களை பிரிக்க நினைக்கும் தவறான செயல் என்றார்.
Chennai: சாப்பிட்ட எச்சில் எலும்பை பொறுக்கி மீண்டும் சுட சுட சூப்! ஷாக் கொடுத்த தள்ளுவண்டிக்காரர்!!
மேலும், சமூக வலைதளம் மூலம் தன்னிடம் விளக்கம் கேட்டதாக அமெரிக்க நாராயணன் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு? அது தவறானது, சமூக வலைதளத்தில் வருகின்ற கடிதம் அவருக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்டது என்றும், அதனை அவரே கூட சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கலாம் எனவும், அவர் கட்சி குறித்து பேசியது என்ன என்பதை அவரிடம் நான் நேரடியாக சொல்லி விட்டேன் என பதிலளித்தார்.