கும்பகோணத்தில் தேமுதிக பிரமுகர் மகளின் திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், திருமணத்திற்கு பிறகு நிருபர்களிடம் கூறுகையில், மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது. இது வந்து காலம் காலமாக சொல்லிக்கிட்டு வருகின்ற விஷயம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, மத்திய அரசு உரிய நிதியை தமிழகத்திற்கு ஒதுக்க வில்லை என பெரிய குற்றச்சாட்டு இருக்கின்றது. அதனை ஒத்துக்கொள்ள வேண்டும். மிகப்பெரிய  மழை வெள்ளத்தை தமிழகம் சந்தித்துள்ளது. விவசாயம் பகுதியான கும்பகோணத்திலிருந்து பேசுகிறேன். விவசாயிகள் எல்லாம் பெரிய அளவில் பாதித்துள்ளனர். சென்னை மாநகரம் மிகப்பெரிய  வெள்ளத்தில் பாதித்தது.  அதற்குரிய நிவாரண நிதியை மத்திய அரசு இதுவரை கொடுக்க வில்லை.  இது கண்டணத்திற்குரியதாகும். எனவே, நிச்சயமாக மாநில அரசும், மத்திய அரசும், ஒன்றாக இருந்து செய்தால் தான் நாட்டை முன்னேற்ற முடியும்.



நீட் தேர்வு விவகாரத்தை வைத்து திமுக அரசியல் செய்கிறது, திமுக அரசின் செயல்பாடுகள் கடந்த 9 மாதங்களில் மஞ்சள் பை, மாற்று திறனாளிகள் சென்னை கடற்கரை வரை செல்ல வசதி என ஒரு சில நல்ல விஷயங்கள் செய்திருந்த போதும் கொடுத்த வாக்குறுதிகளை குறிப்பாக பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம், மற்றும் பொங்கல் பரிசு தொகை வழங்காதது,  வழங்கிய பொருட்களும் தரம் இல்லாமல் இருந்ததும் பெண்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. பள்ளிக்கூடங்களில் மதங்கள் கூடாது, மாணவர்களிடையே பாகுபாடு கூடாது என்பதற்காகத்தான் பள்ளிச் சீருடையை அறிமுகம் செய்யப்பட்டது.  இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. கர்நாடகாவில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக தேமுதிக ஒரு பெண்ணாக துணை நிற்கும். கர்நாடகாவில் நடந்துள்ள சம்பவம் தவறானதாகும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக எவ்வளவு இடங்களில் வெற்றி பெறும் என்பது தேர்தலுக்குப் பிறகு தான் தெரியவரும் என்றும் தேர்தலில் அளித்த வாக்குறுதிபடி, திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்.



உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் தேமுதிக போட்டியிடுகிறது. ஆட்சி, பலம், அதிகார வர்க்கத்தை எதிர்த்து தேமுதிக களத்தில் உள்ளது.  தேமுதிகவின் தேர்தல் முடிவுகள் நன்றாக வரும். . திமுக ஆட்சியில் சில நல்ல விஷயங்கள் நடை பெற்றுள்ளது, ஆனால் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றான, கும்பகோணத்தை மாவட்ட தலைநகராக்க வேண்டும் என்ற இந்த பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை உள்ளிட்ட எந்த கோரிக்கையும் நிறைவேற்றவில்லை.  மாணவச் செல்வங்கள் நம் நாட்டின் எதிர்காலம் அவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தஞ்சையில் இறந்த மாணவி குடும்பத்திற்கு தனது ஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். முன்னதாக, பிரேமலதா விஜயகாந்திற்கு, தஞ்சை வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் பட்டாசுகள் வெடித்தும், கேரள ஜெண்டை மேளம் முழங்க  ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டது