சமூக வலைதளமான ட்விட்டரில் “தலைநிமிர்ந்த தமிழகம்” என்ற ஹாஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 


தலைநிமிர்ந்த தமிழகம்:


’மகளிர் உயர, மாநிலம் உயரும்’ என்ற தி.மு.க.வின் பரப்புரை ஹாஷ்டாக்கான “தலைநிமிர்ந்த தமிழகம்” ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் பெண்களுக்கு பேருந்தில் கட்டணமில்லாப் பயணம், உயர் கல்வி பயிலும்  மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.


மேலும், தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு முதன்மை மாநிலம் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக பொறுப்பாளார்கள் என அனைவரும் இதனை இந்திய அளவில் ”தலைநிமிர்ந்த தமிழகம் என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 


ட்விட்டரில் ட்ரெண்டிங்:


தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் தனது ட்விட்டர் தளத்தில் பதிவுட்டுள்ளதாவது, வன்மை உயர்வு மாந்தர் நலமெல்லாம், பெண்மையினால் உண்டு. நிமிர்ந்த நன்நடை நேர்கொண்ட பார்வையுடன், "ஞாலத்தில் நம் பெண்கள் உயர்ந்திட நம் முதல்வர் நல்லாட்சி"  ஹாஷ்டேக் “தலைநிமிர்ந்த தமிழகம்” என பதிவிட்டுள்ளார். 






ஊராக வளார்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தனது ட்விட்டர் தளத்தில், ”மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் நல்லாட்சியில், மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு, உயர்கல்வி படிக்கும் அரசு பள்ளி மாணவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய், உள்ளிட்ட மகத்தான மகளிர் நல திட்டங்களால் தலைநிமிர்ந்த தமிழகம்” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.