கரூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கரூர் நகர பகுதியில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் கரூர் மாவட்ட பொறுப்பாளர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, "புதுக்கோட்டையில் மின் இணைப்பு வேண்டி நூதன பிரச்சாரம் குறித்த கேள்விக்கு சம்பந்தப்பட்ட வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்கும் வழியில் மின் கம்பம் பொருத்துவதில் இரண்டு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு உள்ளது. இரு தரப்பினரிடம் சுமுக உடன்படிக்கை ஏற்பட்ட பின் அது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் உட்பட ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமாக சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் நிருபர்களிடம் கூறியதாவது புலியூர் பேரூராட்சியில் தலைவர் தேர்வு பிரச்சினையில் எங்கள் திமுக தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகளிடம் நான் பேசினேன். தேர்தல் அன்று கரூர் மாரியம்மன் திருவிழா நடந்தது. ஆளும் திமுக கவுன்சிலர்கள் தேர்தலில் கலந்துகொள்ள செல்லும் முன்பாக தேர்தல் முடிந்து விட்டது. எனவே வரக்கூடிய தேர்தலில் அந்த பிரச்சினைக்கு சமூக தீர்வு காணப்படும். அதில் சில அரசியல் இயக்கங்கள் குளிர்காய நினைக்கின்றனர். கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர்கள்தான் போட்டியிட வேண்டும் என்று கட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவை செயல்படுத்துவது தான் எங்கள் வேலை அதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஏற்கனவே திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டவர் திமுக தலைவர் உத்தரவின்படி ராஜினாமா செய்துள்ளார். வரும் தேர்தலில் தலைவரை போட்டி நன்றி ஒரு மனதாக தேர்வு செய்யும் நிலை ஏற்படும்" இவ்வாறு கூறினார்.
குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலைகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு சீரான மின் வினியோகம் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சிகள்தவறான கருத்துகளை பேசி மக்களிடம் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் 6 முதல் 7 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது. ஆனால் அதை விட குறைவாகவே குஜராத்தில் நிலக்கரி கையிருப்பு உள்ளது. நிலக்கரி கையிருப்பு குறித்து தமிழகத்தை குறைகூறும் இயக்கங்கள் தான் ஆளக்கூடிய மாநிலங்களில் நிலக்கரி கையிருப்பு எவ்வளவு உள்ளது. அங்கெல்லாம் மின்வெட்டு எவ்வளவு நேரம் உள்ளது. மின் வினியோகம் எவ்வளவு நேரம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதை மறந்து மறைத்து பேசி வருகின்றனர். பொய் பிரச்சாரம் மக்களிடத்தில் எடுபடாது.
தமிழகத்தில் தற்போது காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ள தன் காரணமாக, அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
கரூர் மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 3ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழகங்கள் அனைத்து வார்டுகளிலும் மற்றும் சார்பு அணி சார்பில் கரூர் மாவட்டத்தில் 3000 இடங்களில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் திரு உருவ படத்தினை அலங்கரித்து வைத்து மரியாதை செலுத்துவது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.