கடந்த சில நாட்களாக அனல்பறந்து வந்த தமிழக தேர்தல் களம் இன்றோடு ஓயவிருக்கிறது. இன்று மாலை 7 மணியோடு பரப்புரைகளை முடித்துக்கொள்ளவேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது. மாலை 7 மணிக்கு மேல் தொலைக்காட்சி மற்றும் இணையம் வழியாக எந்தவித பரப்புரையிலும் ஈடுபட கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுகவுக்கு ஆதரவு கோரி திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் திமுக சார்பில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது சொந்த தொகுதியான எட்டப்படியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார்.

மாண்புமிகு முதல்வர் அவர்களின் தேர்தல் பிரச்சாரம். pic.twitter.com/CK7SLifyi2
— AIADMK (@AIADMKOfficial) April 3, 2021

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுகவுக்கு ஆதரவு கோரி பரப்புரை- நேரலை. https://t.co/aGD00finWc
— M.K.Stalin (@mkstalin) April 4, 2021

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக கோவை தெற்கு பகுதியில் கட்சி தலைவர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், நடிகை சுகாசினி மணிரத்னம் மற்றும் நடிகை ராதிகா ஆகியோர் தீவிர பரப்புரையில் ஈடுபடவுள்ளனர்.