தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) தலைவர் பாபா சித்திக் படுகொலைசெய்யப்பட்டதை அறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். குடிமைச் சமூகத்தில்,  இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு இடமில்லை. இவை கடும் கண்டனத்துக்குரியவை என்றும்,பாபா சித்திக்  குடும்பத்தாருக்கும் கட்சியினருக்கும்எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


 பாபா சித்திக் படுகொலை
 


தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக், அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். பாபா சித்திக் மார்பில் இரண்டு முறை சுடப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.


 


கைது:



 
இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட 9.9 எம்எம் பிஸ்டல்  மீட்கப்பட்டதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, “கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகள் உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என்றும், மூன்றாவது குற்றவாளியை தீவிரமாக தேடி வருவதாகவும்” தெரிவித்தார். இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பாபா சித்திக்கில் உயிரிழப்பு துருதிருஷ்டவசமானது எனவும் வேதனை தெரிவித்தார்.


எதிர்க்கட்சிகள் விமர்சணம் 
 


இந்த தருணத்தில்,  முன்னாள் அமைச்சர்களை பாதுகாப்பாக வைக்க முடியாவிட்டால் உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்ய வேண்டும். மாநிலத்தின் முதலமைச்சராக தொடரும் உரிமை ஏக்நாத் ஷிண்டேவுக்கு இல்லை எனவும் பலர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். மாநிலத்தில் குற்றவாளிகளுக்கு பயல் இல்லாமல் போய்விட்டது என்று எதிர்க்கட்சிகளும் கடுமையாக சாடி வருகின்றனர்.


முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்: 
 


இந்நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின், தனது இரங்கல் குறிப்பில், கண்டனம் தெரிவித்துள்ளார். “ அவர் தெரிவித்ததாவது “  தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) தலைவர் பாபா சித்திக் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். குடிமைச் சமூகத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு இடமில்லை. இவை கடும் கண்டனத்துக்குரியவை ஆகும்.
 
பாபா சித்திக் அவர்களின் குடும்பத்தாருக்கும் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.