ரஃபேல் கைக்கடிகாரத்தின் பில்லை கேட்டும், அண்ணாமலையை விமர்சித்தும் வெளியாகியுள்ள மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் பில் குறித்தான சர்ச்சை தமிழக அரசியலில் கடந்த டிசம்பர் மாதத்தில் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து, ஏப்ரல் மாதத்தில் நடைபயணம் துவங்கும்போது ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிடுவேன் என அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிலையில், ஏப்ரல் மாதம் தொடங்கியதை அடுத்து பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம், தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலையை டேக் செய்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார், அதில் “வாட்ச் பில் எங்க தம்பி?’ என்று கேட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து, வாட்ச் பில்லை கேட்கும் விதமாக ஹேஷ்டேக் ஒன்றும், பல்வேறு மீம்ஸ்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேநேரம், அண்ணாமலைக்கு ஆதரவாகவும் சிலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனால், இணையவாசிகள் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து சமுக வலைதளங்களில் சண்டையிட்டு வருகின்றனர். அதேநேரம், இதுதொடர்பாக அண்ணாமலை தரப்பில் இருந்து எந்தவித விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை.