திருச்சி, ஸ்ரீரங்கத்தில் பா.ஜ,க. விவசாய மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது,


“ நான் பா.ஜ.க. வந்தது முதல் சிறிய கருத்தை பகிர வேண்டும் என்று எனக்கு ஆசை. பல இடங்களில் என்னிடம் கேட்டுள்ளனர். நீங்கள் பெரியாரை ஏற்றுக் கொண்டுள்ளீர்களா..? ஒரு வாரத்திற்கு முன்பு சிலர் பேசினார்கள். பெரியார் சிலையை நான் உடைக்கப் போகிறேன் என்று கூறினர். அதற்கு என்ன பதில் என்று என்னிடம் கேட்டனர்.


நான் ஒன்றை மட்டும்தான் கூறினேன். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு நிறை இருக்கிறது. குறை இருக்கிறது. பெரியாரை பொறுத்தவரை சில விஷயங்களில் எனக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. குறிப்பாக, கடவுளைப் பற்றி பேசியதில் இருந்து, ஒரு சமுதாயத்தை தாக்கி பேசியதில் இருந்து மாறுபடுகிறேன். அதே நேரத்தில், இந்த மண்ணில் பலர் பல கருத்தை பேசியுள்ளனர்.  




இந்த மண் அனைவரது கருத்தையும் ஏற்றுள்ளது. வேண்டாத கருத்தை வேண்டாம் என்று தள்ளியிருக்கிறது. ஆழ்வார்கள் காலத்தில் இருந்து, நாயன்மார்கள் காலத்தில் இருந்து, திருவள்ளுவர் காலத்தில் இருந்து பல கருத்தை நாம் ஏற்றுள்ளோம். முழுமையாக எல்லா கருத்தையும், எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பெரியார் சிலை இருக்கிறது.


பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஆழ்வார்கள் சிலை, நாயன்மார்கள் சிலை இருக்கும். அதற்காக, ஒருவருடைய சிலையை தாக்கி, அந்த சிலையை அவமானப்படுத்தி இந்த கட்சி அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பெரியாரை தமிழ்நாட்டில் பலரும் மதிக்கிறார்கள். ஒரு கட்சியின் கொள்கை, சித்தாந்தம் வேறு விதமாக இருக்கலாம். பலர் பெரியாரை முழுமையாக ஏற்றுக்கொண்டனர்.




தமிழக மக்களுக்கும், காவல்துறையினருக்கும் நம் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். ஒருவரை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ஒரு மனிதன் எங்கே நின்று கொண்டிருக்கிறாரோ..? அங்கேயே நின்று கொள்ளட்டும். எங்களுக்கு ஏதும் ஆட்சேபனை கிடையாது. நாம் ஆட்சிக்கு வரும்போது யாருடைய சிலையை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைப்போம். அதற்காக, விவசாய நிகழ்ச்சியை காவிரித் தாய்க்கு செய்யும் மரியாதையை போலீஸ் பாதுகாப்பு போட்டு செய்யும்போது அது காவிரித் தாய்க்கு செய்யும் மரியாதையாக இருக்காது என்று சொன்னேன். அது என்னுடைய தனிப்பட்ட கருத்து.


நம்முடைய ஆரத்தி யாருக்கும் தொந்தரவு அளிக்காமல் போயிடும். நாம் ஒரு சிலைக்கு செல்லும்போது அவர்களை தவறாக பேசுவது நமது கொள்கை கிடையாது. அமைதியான முறையில் செல்வோம்.”


இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் படிக்க : பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க திமுக அரசு தவறிவிட்டது - ஆர்.பி. உதயகுமார்


மேலும் படிக்க : காஞ்சிபுரம் : ”திமுக செய்த சாதனை மின் கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வு மட்டுமே..” : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண