அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளராக கடந்த மாதம்  தேர்ந்தெடுக்கப்பட்ட  தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தன்னுடைய இல்லத்தில் இருந்து கிளம்பி சாலை மார்கமாகவே சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம்  போன்ற பகுதிகளை கடந்து பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை சென்றார். அப்பொழுது காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரம்  பகுதிக்கு இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி  அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.  



எடப்பாடி கே.பழனிசாமிக்கு  காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் தலைமையில்  தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் மிகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக சாலையின் இரண்டு பக்கங்களிலும் ஆயிரக்கணக்கான  தொண்டர்களும் நிர்வாகிகளும்  நின்று கொண்டு  எடப்பாடி பழனிசாமி  மீது ரோஜா பூ உள்ளிட்ட பலவிதமான  வாசனை மலர்களை தூவி வரவேற்றனர். அதேபோல்  ஒயிலாட்டம், மயிலாட்டம் ,கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய நிர்வாகிகள் வரிசையாக நின்று பூங்கொத்துகள் மற்றும் சால்வைகள் வழங்கி வாழ்த்துகளைப் பெற்றனர்.  கழகத் தொண்டர்கள்மிகுந்த மகிழ்ச்சியுடன் பட்டாசுகளை வெடித்து,  வரவேற்ப்பு அளித்தனர்.

 



பொதுக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக கட்சி இல்லை அது ஒரு கார்பரேட் கம்பெனி ,வயதான முதியோர்களுக்கு தரும் முதியோர் ஊக்க தொகை திட்டத்தை பெரும்பாலும் முதியோருக்கு  நிறுத்திவிட்டது திமுக அரசு . திமுக செய்த சாதனை மின் கட்டணம் உயர்வு, வீடு வரி உயர்வு  மட்டும்தான். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டது எங்கு சென்றாலும் போதை பொருட்கள் கிடைக்கின்றது என தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசர்,   முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம் , ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளருமான மதனந்தபுரம் கே.பழனி, அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் எஸ்.எஸ் ஆர்.சத்தியா, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்டத் துணைச் செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன், காஞ்சி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் , உள்ளிட்ட ஏராளமான  நிர்வாகிகள் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.