சட்டசபை கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், நாளை மாலை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாளை காலை 2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்ட தொடரானது ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இந்நிலையில், மாலையில் இ.பி.எஸ். தரப்பிலான அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூடவுள்ளது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இதையடுத்து, ஓ.பன்னீர்செலவம் தரப்பினர் என்ன செய்ய போகின்றனர் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.