தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திரைப்படங்களிலிருந்தும்,  திரைப்பட துறையை சார்ந்தவர்களும் அரசியலுக்கு வருவது தொடர் கதையாக உள்ளது. நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை துவங்கி அரசியல் பயணத்தை துவங்கியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்சியை விஜய் துவங்கி இருந்தாலும், சட்டமன்றத் தேர்தல் மட்டுமே தனது இலக்கு என்று அப்போது அறிவித்திருந்தார். எனவே சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் எந்த மாதிரியான யூகத்தை அமைக்க போகிறார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது .


முன்னதாக விஜய் செய்தது என்ன ?


கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய் மக்களை நோக்கி பயணிக்க, பல்வேறு திட்டங்களையும் யூகத்தையும் வகுக்க துவங்கிவிட்டார். தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார்.  அதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நல திட்ட உதவிகளை செய்வது, குறிப்பாக விலையில்லா உணவகம்,  இரவு நேர பாடசாலை, பயிலரங்கம், உள்ளிட்ட  மக்களை நோக்கி செல்லக்கூடிய  திட்டங்களை வகுத்தார்.


 அமைப்பு ரீதியாக  வலுப்படுத்திய விஜய்


தனது மக்கள் இயக்கத்தை பல்வேறு அணிகளை கட்டமைத்து  அரசியல் கட்சிக்கு என்னென்ன அணிகள் தேவையோ, அனைத்தையும் உருவாக்கி இருந்தார்.  வழக்கறிஞர் அணி,  மருத்துவர் அணி, மாணவர் அணி,  இளைஞரணி ,தொண்டரணி, தகவல் தொழில்நுட்ப அணி , மகளிர் அணி  உள்ளிட்ட அரசியல் கட்சிக்கு தேவையான   அணிகளையும்  அமைப்பையும்  வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார்.


கடந்தாண்டு திடீர் என்டரி


இந்தநிலையில் கடந்தாண்டு நடிகர் விஜய் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளில்  தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தனது கையால்  பரிசுத் தொகையையும்,  சால்வை அணிவித்து பாராட்டுகளையும் தெரிவித்தார். அப்பொழுதே அவர்  காமராஜர் , அம்பேத்கர் உள்ளிட்ட  பல்வேறு தலைவர்களை பற்றி மாணவர்கள் மத்தியில் பேசி இருந்தார். அதன் பிறகு விஜய் அரசியலுக்கு வருவது முழுமையாக உறுதியானது. இந்த ஆண்டும் இந்த திட்டத்தை செயல்படுத்த விஜய் முடிவு செய்துள்ளார்.


 அடுத்த திட்டத்தை கையில் எடுத்த விஜய்  


அதாவது  கட்சி துவங்கப்பட்டிருப்பதால் ஆங்காங்கே  கொடி ஏற்றுவதிலோ, அல்லது பல்வேறு நல திட்ட உதவிகள் செய்யும்   செய்யும்பொழுது  ஏதாவது பிரச்சனை வந்தால் அதை எதிர் கொள்ள வழக்கறிஞர் அணியை கட்டமைக்கும் பணியில்  நடிகர் விஜய் ஈடுபட்டு வருகிறார். அதேபோன்று வழக்கறிஞர் மூலம்  இலவச சட்ட ஆலோசனை மையங்கள் துவங்கி  மக்களை நோக்கி பயணிக்கவும் முடிவு செய்துள்ளார்.  


விரைவில் பட்டியல் 


இதேபோன்று  ஏழை , எளிய மக்கள் பயன்பெறும் வகையில் காவல் நிலையத்திற்கு இரண்டு வழக்கறிஞர்கள் கட்சி சார்பில் நியமிக்க விஜய் முடிவு செய்துள்ளார்.  முதற்கட்டமாக மாவட்ட அளவில் இதற்கான பணிகளை துவங்கியிருக்கும் விஜய்,  அதற்கு அடுத்த கட்டமாக  சேவை அடிப்படையில்  காவல் நிலையத்திற்கு இரண்டு வழக்கறிஞர்கள்  நியமனம் செய்து அங்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் திட்டம் திட்ட உள்ளார்.  விரைவில் வழக்கறிஞர்கள் பட்டியல் வெளியாகவும் வாய்ப்பு உள்ளதாக   கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன