சிவகங்கையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அரண்மனைவாசல் முன்பு மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜியின் அராஜக போக்கைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா தலைமையில் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்குவங்க திரினாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பேனர்ஜியை கண்டித்து கண்டன கோஷங்கள் முழக்கமிட்டனர். 
ஆர்ப்பாட்டத்திற்கு பின் H ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். 




சிவகங்கை எச்.ராஜா பேட்டி:


மேற்கு வங்கத்தில் வன்முறையானது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.  இரண்டு நாட்களாக வன்முறை நடந்து கொண்டிருக்கிறது. இது இந்திய சரித்திரத்தில் ஒரு கருப்பு அத்தியாயம்.  இதுவரை 9 படுகொலைகள் நடந்து இருக்கிறது.  குண்டர்களால் பெண் கற்பழிக்கப்படுகிறார்கள். அரசியல் சட்டப்படி ஒரு அரசாங்கம் நடக்காது என்றால் கவர்னரிடம் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கும் இடத்திலே பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு  உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும்  என்று மம்தாவை எச்சரிக்க விரும்புகிறேன் .  தமிழகத்தில் நூறு நாட்களுக்கு நான் திமுக அரசாங்கத்தை விமர்சிக்க போவது கிடையாது . ஏன் என்றால் எல்லா இடத்திலேயும் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 100 நாளில் நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபடாமல் இருந்திருந்தால் இன்றைக்கு திமுக ஆட்சிக்கு வந்து இருக்காது.  திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற எண்ணத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். 




 ‛ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது என்று ஜாதகத்தில் இருப்பதாக,’ H.ராஜா அடிக்கடி கூறியதற்கு, கார்த்தி சிதம்பரம் இன்று டுவிட் செய்தது குறித்து கேட்டபோது, டென்சனான H ராஜா, ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கடுமையாக விமர்ச்சித்தார்.
இறுதியில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு  பெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் H. ராஜா காலில் விழுந்து வாழ்த்து பெற்றது குறிப்பிடதக்கது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட எச்.ராஜா, திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியிடம் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


எச்.ராஜாவின் வெற்றியை பாதித்ததில் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி பிரித்த வாக்குகள் முக்கியத்துவம் பெருகின்றனர். அதன் அடிப்படையில் தான் அதிமுக பிரிந்ததை திமுக வெற்றியோடு எச்.ராஜா ஒப்பிட்டு பேசுயிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். எது எப்படி இருந்தாலும் அடுத்த 100 நாட்களுக்கு திமுக குறித்த எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் என எச்.ராஜா கூறியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.