தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் 156  தொகுதிகளை கைப்பற்றி வெற்றிப் பெற்றது. 1996ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, திமுக அரிதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. திமுக -வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 17 இடங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அஇஅதிமுக தலைமயிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 78 இடங்களை தக்கவைத்துக் கொண்டது. 

2016 சட்டமன்றத் தேர்தலில், திமுக 176 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை களமிறக்கியது. இந்த தொகுதியில் மட்டும் திமுக 41.05 சதவிகித வாக்குகளைப் பெற்றது . அதேபோன்று, 227 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை களமிறக்கிய அதிமுக வெறும் 40.78 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. 169 தொகுதிகளில் திமுக- அதிமுக இடையே நேரடி போட்டி இருந்தது.

2021 சட்டமன்றத் தேர்தலில், கிட்டத்தட்ட 130 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக- அதிமுக நேரெதிராக மோதின. இதில், 85 தொகுதிகளில் திமுகவும், 45  இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றது.

இந்த 85 தொகுதிகளில், அம்பத்தூர், அரியலூர், ஆம்பூர், சங்கரன்கோவில், மானாமதுரை உள்ளிட்ட 45 தொகுதிகள் கடந்தாண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வென்றெடுத்த தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.  அதேபோன்று, அதிமுக கடந்த சட்டமன்றத் தேர்தலில் உதய சூரியனிடம் இழந்த ஆலங்குளம், புவனகிரி, கூடலூர் , கன்னியாகுமரி,கிருஷ்ணகிரி, மதுராந்தகம் , ஒரத்தநாடு , பரமத்தி - வேலூர், சிங்கநல்லூர் , சீர்காழி , திண்டிவனம் , வேப்பன்ஹள்ளி  உள்ளிட்ட 13 தொகுதிகளை இம்முறை மீண்டும் கைப்பற்றியது.     

போட்டி நிலவரம்:  

இந்த 130 தொகுதிகளில் கடந்த தேர்தலை விட  இந்த முறை வெற்றி வாக்கு வித்தியாசம் கூடுதலாக உள்ளன. அதாவது, வேட்பாளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். உதரணமாக, 2016ல் பர்கூர் (அதிமுக), கரூர் (அதிமுக ), ஓட்டப்பிடாரம் (அதிமுக ), ராதாபுரம் (அதிமுக ), பரமத்தி - வேலூர் (திமுக ), திருமயம் (திமுக) , திருவிடைமருதூர் (திமுக), திண்டிவனம் (திமுக) உள்ளிட்ட தொகுகளில் 1000க்கும் குறைவான வாக்குகளே வெற்றியைத் தீர்மானித்தன.

தற்போது, கரூர், பர்கூர், ஒட்டப்பிடாரம், ராதாபுரம், திருவிடைமருதூர் உள்ளிட்ட தொகுதிகளை திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் கைப்பற்றியது. அதேபோன்ற, கடந்த தேர்தலில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த பரமத்தி வேலூர், திண்டிவனம் தொகுதிகளை அதிமுக மீண்டும் கைப்பற்றியுள்ளது.  

இந்த முறை, திமுக- அதிமுக இடையேயான நேரடி மோதலில், காட்பாடி, தியாகராய நகர் ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டும் தான் 1000க்கும் குறைவான வாக்கு வித்தியாசாம் காணப்படுகிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றனர். இதைத் தவிர்த்து,  கிணத்துக்கடவு , அந்தியூர் , ஜோலார்பேட்டை , கிருஷ்ணகிரி, உத்திரமேரூர் உள்ளிட்ட தொகுதிகளில் திமுக, அதிமுக வேட்பாளர் இடையே கடும் போட்டி நிலவியது.   

கடந்த தேர்தலில் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இந்த தேர்தலில் தனது அரசியல் ஆதிக்கத்தை அதிகப்படுத்தியுள்ளனர்.  உதாரணாமாக, எடப்பாடி, கொளத்தூர், சோழிங்கநல்தூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட தொகுதிகள் அந்தந்த வேட்பாளரின் கோட்டையாக உருவாகிவருகிறது. 

அதேபோன்ற, கடந்த தேர்தலில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சில வேட்பாளர்கள் இந்த முறை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளனர். உதாரணமாக, திருச்சிராப்பள்ளி கிழக்கு , கிருஷ்ணராயபுரம், ராதாகிருஷ்ணன் நகர், மதுரவாயல், மண்ணச்சநல்லூர் , மணப்பாறை, மானாமதுரை, முசிறி, நாமக்கல், ஒரத்தநாடு, பாபாநாசம், பரமக்குடி , பட்டுக்கோட்டை, ராயபுரம், விழுப்புரம், சோழவந்தான், ஆம்பூர், ஆவடி, அம்பத்தூர், மதுரை வடக்கு  போன்ற சட்டமன்றத் தொகுதிகள் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் எதிர் தரப்பினரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.        

திமுக vs அதிமுக  

சட்டமன்றத் தொகுதி  திமுக  அதிமுக  வாக்கு வித்தியாசம்  2016 தேர்தல் முடிவுகள் 
ஆலந்தூர்  வெற்றி  தோல்வி  35652 திமுக (19169 )
ஆலங்குடி  வெற்றி  தோல்வி  25847 திமுக (9941) 
ஆலங்குளம்  தோல்வி  வெற்றி  3539 திமுக (4754)
அம்பாசமுத்திரம்  தோல்வி  வெற்றி  16915 அதிமுக ( 13166)
அம்பத்தூர்  வெற்றி  தோல்வி    50,000 +   அதிமுக (17498) 
ஆம்பூர்  வெற்றி  தோல்வி  20232 அதிமுக (28006) 
அணைக்கட்டு  வெற்றி  தோல்வி  6360 திமுக (8768)
ஆண்டிப்பட்டி  வெற்றி  தோல்வி  8538 ஆதிமுக (30196)
அண்ணா நகர்  வெற்றி  தோல்வி 27445 திமுக (1086) 
அந்தியூர்  வெற்றி  தோல்வி  1275 அதிமுக ( 5312)
ஆரணி  தோல்வி  வெற்றி     அதிமுக (7327)
அரியலூர்  வெற்றி  தோல்வி  3234 அதிமுக ( 2043)
அருப்புக்கோட்டை  வெற்றி  தோல்வி  39034 திமுக (18054)
ஆத்தூர்  தோல்வி  வெற்றி  8257 அதிமுக ( 17334) அதிகம் 
ஆவடி  வெற்றி  தோல்வி 55275 அதிமுக (1395)
அவினாசி தோல்வி  வெற்றி  50902 அதிமுக (30674)
பர்கூர்  வெற்றி தோல்வி  12614 அதிமுக (982)
பவானி  தோல்வி  வெற்றி  22523 அதிமுக (24887)
பவானிசாகர்  தோல்வி  வெற்றி  16008 அதிமுக ( 13104)
புவனகிரி  தோல்வி  வெற்றி  8259 திமுக  (5488)
போடிநாயக்கனூர் தோல்வி முன்னிலை  11021 அதிமுக (15608)
செங்கல்பட்டு வெற்றி  தோல்வி  26665 திமுக (26292)
செங்கம் வெற்றி தோல்வி 11570 திமுக (12691 )
செய்யார்  வெற்றி  தோல்வி  12271 அதிமுக (8527)
கோயம்பத்தூர் வடக்கு  வெற்றி  தோல்வி  4001 திமுக (7724)
குன்னூர்  வெற்றி  தோல்வி  4105 அதிமுக ( 3710)
கடலூர்  வெற்றி  தோல்வி  5151 அதிமுக (24413)
ராதாகிருஷ்ணன் நகர்   வெற்றி  தோல்வி  42479 அதிமுக (39545)
எடப்பாடி  தோல்வி  வெற்றி  93802 அதிமுக ( 42022)
எழும்பூர்  வெற்றி  தோல்வி  38768 திமுக (10679)
ஈரோடு மேற்கு வெற்றி  தோல்வி  22089 அதிமுக ( 4906)
கங்காவள்ளி தோல்வி  வெற்றி  7361 அதிமுக (2262)
கோபிசெட்டிபாளையம்   தோல்வி  வெற்றி  28563 அதிமுக (11223)
கூடலூர்  தோல்வி  வெற்றி  1945 திமுக (13379 )
குடியாத்தம்  வெற்றி  தோல்வி  6901 அதிமுக (11470)
ஓசூர்  வெற்றி  தோல்வி  12367 அதிமுக (22964 )
ஜோலார்பேட்டை வெற்றி  தோல்வி  1091 அதிமுக (10991)
கலசபாக்கம்  வெற்றி  தோல்வி  9222 அதிமுக (26414)
காங்கயம்  வெற்றி  தோல்வி  7331 அதிமுக (13135 ) 
கன்னியாகுமரி தோல்வி வெற்றி  16213 திமுக (5912)
கரூர்  வெற்றி  தோல்வி  12448 அதிமுக (441)
காட்பாடி  வெற்றி  தோல்வி  746 திமுக (23946)
கவுண்டம்பாளையம்  தோல்வி  வெற்றி  9776 அதிமுக (8025)
கீழ்வைத்தியணான் குப்பம் தோல்வி  வெற்றி  10582 அதிமுக (9746)
கிணத்துக்கடவு தோல்வி  வெற்றி  1095 அதிமுக (1332) 
கொளத்தூர்  வெற்றி  தோல்வி  70384 திமுக (37730 )
கிருஷ்ணகிரி தோல்வி  வெற்றி  1431 திமுக (4891)
கிருஷ்ணராயபுரம்  வெற்றி  தோல்வி  31625 அதிமுக (35301)
குளித்தலை  வெற்றி  தோல்வி  23540 திமுக (11896)
குமாரபாளையம்  தோல்வி  வெற்றி  31646 அதிமுக (47329)
கும்பகோணம்  வெற்றி  தோல்வி  21383 திமுக (8457)
குண்ணம் வெற்றி  தோல்வி  6329 அதிமுக (18796)
குறிஞ்சிப்பாடி  வெற்றி  தோல்வி  17527 திமுக (28108)
லால்குடி வெற்றி  தோல்வி  16949 திமுக (3837)
மடத்துக்குளம்  தோல்வி  வெற்றி  6438 திமுக (1667)
மாதவரம்  வெற்றி  தோல்வி  57071 திமுக (15253)
மதுரை சென்ட்ரல்  வெற்றி  தோல்வி  34176 திமுக ( 5762)
மதுரை கிழக்கு வெற்றி  தோல்வி  38482 திமுக (32772)
மதுரை வடக்கு  வெற்றி  தோல்வி  22916 அதிமுக (18839)
மதுரை தெற்கு  வெற்றி  தோல்வி  6515 அதிமுக (23763)
மதுரை மேற்கு தோல்வி  வெற்றி  9121 அதிமுக (16398)
மதுராந்தகம்  தோல்வி  வெற்றி  3570 திமுக (2957)
மதுரவாயல்  வெற்றி  தோல்வி  31721 அதிமுக (8402)
மண்ணச்சநல்லூர்  வெற்றி  தோல்வி  59618 அதிமுக (7522)
மானாமதுரை  வெற்றி  தோல்வி  14091 அதிமுக (14889)
மணப்பாறை  வெற்றி  தோல்வி  12243 அதிமுக (18277)
மன்னார்குடி  வெற்றி  தோல்வி  37393 திமுக (9937)
மேட்டுப்பாளையம்  வெற்றி  தோல்வி  2456 அதிமுக (16114)
முதுகுளத்தூர்  வெற்றி  தோல்வி  20721 காங்கிரஸ் 
முசிரி வெற்றி  தோல்வி  26836 அதிமுக (32087)
மயிலாப்பூர்  வெற்றி  தோல்வி  12633 அதிமுக (14728)
நாமக்கல்  வெற்றி  தோல்வி  27861 அதிமுக (13534)
நன்னிலம் தோல்வி  வெற்றி  4424 அதிமுக ( 21276)
நத்தம்  தோல்வி  வெற்றி  11932 திமுக (2110 )
நிலக்கோட்டை  தோல்வி  வெற்றி  27618 அதிமுக (14776)
ஒட்டன்சத்திரம்  வெற்றி  தோல்வி  28742 திமுக (65727)
ஒரத்தநாடு  தோல்வி  வெற்றி  28835 அதிமுக (3645)
ஓட்டப்பிடாரம்   வெற்றி  தோல்வி  8510 அதிமுக (493)
பாலக்கோடு தோல்வி  வெற்றி  28100 அதிமுக  (5983)
பத்மநாபபுரம்  வெற்றி  தோல்வி  26885 திமுக (40905)
பழனி வெற்றி  தோல்வி  30056 திமுக (25586)
பாளையம்கோட்டை  வெற்றி  தோல்வி  52141 திமுக  (15872)
பல்லடம்  தோல்வி  வெற்றி  32691 அதிமுக (32174)
பல்லாவரம்  வெற்றி  தோல்வி  22135 திமுக (22165)
பண்ருட்டி  வெற்றி  தோல்வி  (4697) அதிமுக (3128)
பாபாநாசம்  வெற்றி  தோல்வி  16273 அதிமுக (24365)
பாப்பிரெட்டிபட்டி தோல்வி  வெற்றி  36943 அதிமுக (12713)
பரமக்குடி   வெற்றி  தோல்வி  13285 அதிமுக (11389)
பரமத்தி - வேலூர் தோல்வி  வெற்றி  7662 திமுக (818)
பட்டுக்கோட்டை  வெற்றி  தோல்வி  25269 அதிமுக (12358)
புதுக்கோட்டை   வெற்றி  தோல்வி  11037 திமுக (2084)
ராதாபுரம்  வெற்றி  தோல்வி  5925 அதிமுக (49)
ராஜபாளையம்  வெற்றி  தோல்வி  3898 திமுக (4802)
ராணிப்பேட்டை   வெற்றி  தோல்வி  16498 திமுக (7896)
ராசிபுரம்  வெற்றி  தோல்வி  1952 அதிமுக (9631)
ரிஷிவந்தியம்  வெற்றி  தோல்வி  41728 திமுக (20503)
ராயபுரம்  வெற்றி  தோல்வி  27779 அதிமுக (8031)
சைதாபேட்டை  வெற்றி  தோல்வி  29295 திமுக (16255)
சேலம் நார்த்  வெற்றி  தோல்வி  7588 திமுக (9873)
சேலம் சவுத்  தோல்வி  வெற்றி  22609 அதிமுக ( 30453)
சங்கரன்கோவில்  வெற்றி  தோல்வி  5297 அதிமுக (14489)
சங்ககிரி  தோல்வி  வெற்றி  20045 அதிமுக (37374)
சாத்தூர்  வெற்றி  தோல்வி  11179 அதிமுக (4427)
சேந்தமங்கலம் வெற்றி  தோல்வி  10493 அதிமுக (12333)
சோழவந்தான்  வெற்றி  தோல்வி  17045 அதிமுக (24857)
சோழிங்கநல்தூர்  வெற்றி  தோல்வி  34761 திமுக (14913)
சிங்கநல்லூர்  தோல்வி  வெற்றி  10854 திமுக (5180)
சீர்காழி  தோல்வி  வெற்றி  12148 திமுக (9003)
ஸ்ரீ ரங்கம்  வெற்றி  தோல்வி  19915 அதிமுக (14409)
சூலூர்  தோல்வி  வெற்றி  31932 அதிமுக (36631)
தாம்பரம்  வெற்றி  தோல்வி  36824 திமுக (14445)
தஞ்சாவூர்  வெற்றி  தோல்வி  47149  - 
திரு வி.க நகர்   வெற்றி  தோல்வி  55013 திமுக  (3322)
திருமங்கலம்   தோல்வி  வெற்றி  14087 அதிமுக (23590)
திருமயம்  வெற்றி  தோல்வி  1382 திமுக (766)
திருவள்ளூர்  வெற்றி  தோல்வி  22701 திமுக (5138)
திருவாரூர்  வெற்றி  தோல்வி  51174 திமுக (68366)
திருவேம்பூர்  வெற்றி  தோல்வி  49697 திமுக ( 16695)
திருவிடைமருதூர்  வெற்றி  தோல்வி  10680 திமுக (532)
திருவொற்றியூர்  வெற்றி  தோல்வி  37661 திமுக (4863)
தியாகராக நகர்  வெற்றி  தோல்வி  137 திமுக (3155)
தொண்டமுத்தூர்  தோல்வி  வெற்றி   41630 அதிமுக (64041)
தூத்துக்குடி  வெற்றி  தோல்வி  50310 திமுக ( 8829)
துறையூர்   வெற்றி  தோல்வி  22071 திமுக (8068) 
திண்டிவனம்  தோல்வி  வெற்றி  9753 திமுக (101)
திருச்செந்தூர்  வெற்றி  தோல்வி  25263 திமுக (26001)
திருச்செங்கோடு    வெற்றி  தோல்வி  2862 அதிமுக ( 3390)  
திருச்சிராப்பள்ளி கிழக்கு  வெற்றி  தோல்வி  53797 அதிமுக (21894)
திருச்சிராப்பள்ளி மேற்கு  வெற்றி  தோல்வி  85109 திமுக (28415)
திருச்சுழி  வெற்றி  தோல்வி  60992 திமுக (26577)
திருப்பத்தூர்  வெற்றி  தோல்வி  37374 திமுக (42004)
திருப்பூர் தெற்கு  வெற்றி  தோல்வி  4709 அதிமுக ( 15933)
திருத்தணி  வெற்றி  தோல்வி  29253 அதிமுக (23141)
உளுந்தூர்பேட்டை  வெற்றி  தோல்வி  5256 அதிமுக (4164)
உசிலம்பட்டி  தோல்வி  வெற்றி  7477 அதிமுக ( 32906)
உத்திரமேரூர்  வெற்றி  தோல்வி  1622 திமுக (12156)
வாசுதேவநல்லூர்  வெற்றி  தோல்வி  2367 அதிமுக (18758)
வேதாரணையம்  தோல்வி  வெற்றி  12329 அதிமுக (22998)
வேடசந்தூர் வெற்றி  தோல்வி  17553 அதிமுக (19938)
வீரபாண்டி  தோல்வி  வெற்றி  19895 அதிமுக (14481)
வேலூர்  வெற்றி  தோல்வி  9181 அதிமுக (26210)
வேப்பன்ஹள்ளி   தோல்வி  வெற்றி  3054 திமுக (5228)
விக்கிரவாண்டி  வெற்றி  தோல்வி  9573 திமுக (6912)
விளாத்திகுளம்  வெற்றி  தோல்வி  38549 அதிமுக (18718)
வில்லிவாக்கம்  வெற்றி  தோல்வி  37237 திமுக (9321)
விழுப்புரம்  வெற்றி  தோல்வி  37237 அதிமுக (9321)
விராலிமலை தோல்வி  வெற்றி  22008 அதிமுக (8447)
விருகம்பாக்கம்  வெற்றி  தோல்வி  21339 திமுக (2870)
ஏற்காடு  தோல்வி  வெற்றி  25955 அதிமுக (17394)