இளம் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் தொடர்ச்சியாக அரசியலமைப்பை பாதுகாப்போம்-கையோடு கைகோர்ப்போம் என்னும் மாபெரும் பிரச்சார இயக்கத்தை முன்னெடுப்பதும் அரசியலமைப்பை பாதுகாப்போம் கையோடு கைகோர்ப்போம் பிரச்சார இயக்கத்தின் மண்டல ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை, வேலூர், சேலம் மாவட்டங்களுக்கான மண்டல கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் செங்கம் குமார் ஏற்பாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்றது.




 


இதனை தொடர்ந்து விழா மேடையில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி;  “இந்திய ஒற்றுமை நடை பயணம் என்ற பெயரில் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை நடந்து வருகிறார். அவர் எங்களுக்காகவும் கட்சிக்காகவோ நடக்கவில்லை இந்தியாவில் ஒற்றுமை நிகழ என்பதற்காக ராகுல் காந்தி நடந்து வருகிறார். பிரதமர் மோடி நம்மை இஸ்லாமியர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், தலித்துகளாகவும் நம்மை பிரித்து பார்க்கின்றார். அவர் கும்பிடும் கடவுளையே நாமும் கும்பிட வேண்டும் என்று நினைக்கின்றார். ஆனால் இந்த நாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருக்கும் மக்களை ஒன்று படுத்துவது, ஒன்று என நினைப்பது காங்கிரஸ் கட்சிதான் என்றார்.காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது பெட்ரோல் விலை 70 ருபாய்க்கு கொடுத்தோம்,ஆனால் மோடியால் அது முடியவில்லை இன்றைக்கு 110 ரூபாயிக்கு பெட்ரோல் விற்க்கப்படுகின்றது என்றார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது அதிக வரி விதிக்க வில்லை பாரதிய ஜனதா அதிக வரி விதிக்கின்றனர். குடும்ப பென்களுக்காக அன்னை சோனியா காந்தி நூறுநாள் வேலை திட்டத்தை கொண்டு வந்தார், இதில் இளம் பெண்கள் முதல 80 வயது முதியவர் வரை பயன்பெறுகின்றனர்.


 




 


காங்கிரஸ் கட்சி இருந்தபோது இந்தியாவில் 3 கோடி இளைஞர்களுக்கு வேலைப்புகள் அளித்தோம், தற்போது பாஜக ஆட்சியில் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றவர். பாஜக ஆட்சி செய்வதற்கு தகுதியற்றவர்கள். 10 லட்சம் கோடி முதலாளிகளுடைய வங்கி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இந்த பிஜேபி அரசு இது காங்கிரஸ் ஆட்சி என்பது விவசாய கடன் தள்ளுபடி மாணவர்களுக்கு கல்வி கடன் தள்ளுபடி செய்துள்ளது 70 ஆயிரம் கோடியை மன்மோகன் சிங் தள்ளுபடி செய்தார் 7000 கோடியை டாக்டர்கள் செய்தார். அனைத்து கிராமங்களிலும் ஆரம்ப பள்ளிகூடம் இருக்க வேண்டும் என சொன்னவர் பெருந்தலைவர் காமராஜர், பள்ளிக்கு ஏழை எளிய குழந்தைகள் வரவேண்டும் என்றால் அவர்களுக்காக இலவசமாக மதிய உணவு வழங்கியவர் பெருந்தலைவர் காமராஜர் என்றும், மகாத்மா காந்தி எப்படி தண்டி யாத்திரையை தொடங்கினாரோ அதோ போல் ராகுல் காந்தியின் யாத்திரை மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளாது என்றும், நாம் அனைவரும் கிராமம்தோறும் நமது காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்ற வேண்டும். ஈரோடு தொகுதியில் நடைப்பெற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்ப்பில் ஈவி கே எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். 


 




நான் அண்ணாமலைக்கு நேரடியாக ஒரு சவால் விடுகின்றேன் அ தி மு க வை விட பாஜக கட்சி தான் பெரிய கட்சி என்று சொன்னார், அவர் நாடாளுமன்ற தேர்தலில் தனியாக நிற்பதற்கு முன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நிற்க முடியுமா தனியாக கூட நிற்க வேண்டாம் அ தி மு க கூட்டனியோடு அண்ணாமலை நிற்பதற்கு தைரியம் இருக்கின்றதா தைரியம் இருந்தால் அண்ணாமலை நின்று காட்டட்டும் என்றார். அ தி மு க கூட்டனியில் தேர்தலில் நிற்பதற்கு தயங்குகின்றனர் அவர்களுக்கு தேர்தலை சந்திக்க கூடிய ஆற்றல் இல்லை இவ்வளவு தான் அவர்களின் பலம் அவர்களில் யார் நிற்கின்றார்கள் என்பதே தெரியவில்லை, யார் நிற்க வேண்டும் என்ற பந்தை அவர்களுக்குள்ளேயே உதைத்து கொள்கின்றனர். 


 




 


எங்களோடு மோத தைரியம் இல்லை எனவும் அங்கு நிற்பதற்கு அதிமுக, பாஜக, தமிழ்மாநில காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் தயங்குகிறார்கள். திமுக தலைமையிலான காங்கிரஸ் கட்சி கூட்டணி தர்மத்தோடு செயல்படுகிறது. ஏனெனில் ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சிதான் நின்றது அதனால் காங்கிரஸ் கட்சியினரே போட்டியிடுங்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் பெருமையோடு தெரிவித்துள்ளார். எனவே இங்கு இருக்கும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஈரோட்டிற்கு வந்து கைசின்னத்திற்கு வாக்கு சேகரித்து நமது வேட்பாளரை எதிர்பார்க்கும் வகையில் அதிக அளவு வாகன வித்தியாசத்தில் வெற்றிபெற அனைவரும் பாடுபட வேண்டும்” என்று கூறினார்.