அரசியலில் அடிப்படை அறிவை விஜய் வளர்த்து கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் தவெக தலைவர் விஜயை விமர்சித்து பேசிய அவர், "நடிகராக இருந்து இப்போதுதான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு அரசியலின் அடிப்படை புரிதல் தேவை'. அரசியலில் அடிப்படை பொது அறிவை தவெக தலைவர் விஜய் வளர்த்து கொள்ள வேண்டும்" என்றார்.
இதையும் படிக்க: என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
விஜய் மீது அண்ணாமலை விமர்சனம்:
நேற்று முன்தினம் நடந்த 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து பாஜகவை விமர்சித்திருந்தார் தவெக தலைவர் விஜய். "இன்றைக்கு மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டுகொள்ளாத ஒரு அரசு மேலே இருந்து நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது" என விஜய் கூறி இருந்தார்.
இதற்கு பதிலடி அளித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "மணிப்பூருக்கு செல்ல விஜய் தயாராக இருந்தால் அவருடன் மணிப்பூர் சென்று அங்குள்ள கள நிலவரத்தை எடுத்துரைக்க தயார். மணிப்பூர் விவகாரத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.
"அம்பேத்கரை வைத்து அரசியல் வியாபாரம்"
தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்து பேசிய அண்ணாமலை, "விசிக யார் கையில் உள்ளது. ஆதவ் அர்ஜுனா மீது திருமாவளவன் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? திருமாவளவன் செல்லாத நிகழ்ச்சிக்கு அவரது கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா சென்றது ஏன்?
அம்பேத்கரை வைத்து வியாபாரம் நடைபெறுவதற்கு இந்த புத்தக வெளியீட்டு விழா ஒரு ஆதாரம். அம்பேத்கரை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்கிறார்கள். விசிகவுக்கு ஒரு தலைமையா? இரண்டு தலைமையா? அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட வேறு ஆட்களே இல்லையா? லாட்டரி மார்ட்டினின் மறுமகன் கையில் விசிக உள்ளது" என்றார்.
இதையும் படிக்க: Kanguva: சூர்யா ரசிகர்களே! அமேசான் ப்ரைமில் ரிலீசானது கங்குவா - OTTயில் வெற்றி பெறுமா?