Kanguva: சூர்யா ரசிகர்களே! அமேசான் ப்ரைமில் ரிலீசானது கங்குவா - OTTயில் வெற்றி பெறுமா?

Kanguva Release: சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படம் ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் நேற்று இரவு ரிலீசானது.

Continues below advertisement

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரது நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருந்த படம் கங்குவா. சூர்யா நடிப்பில் உருவான இந்த படம் கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி வெளியாகியது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தாலும், கடும் விமர்சனங்களாலும் படம் தோல்வியைச் சந்தித்தது.

Continues below advertisement

அமேசான் ப்ரைமில் ரிலீஸ்:

இந்த நிலையில், கங்குவா படம் நேற்று இரவு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்கில் இந்த படத்தை பார்க்க இயலாத ரசிகர்கள் அமேசான் ப்ரைமில் பார்த்து வருகின்றனர். படம் திரையரங்கில் வெளியானபோது 2 மணி நேரம் 33 நிமிடங்கள் இருந்தது. பின்னர், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 12 நிமிடங்கள் வெட்டப்பட்டது.

இந்த நிலையில், ட்ரீம் செய்யப்பட்ட திரைப்படமே அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. திரையரங்கில் பெரியளவு வரவேற்பை பெறாத கங்குவா படம், அமேசானில் வரவேற்பை பெறும் என்று படக்குழு நம்பிக்கைடன் உள்ளது.

கடும் விமர்சனங்களை கண்ட கங்குவா:

சிவா இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் கே.இ.ஞானவேல்ராஜா இயக்கியுள்ளார். சூர்யாவிற்கு வில்லனாக இந்த படத்தில் உதிரன் என்ற கதாபாத்திரத்தில் பாபி தியோல் நடித்துள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். நிஷாத் யூசுப் இந்த படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். வெற்றி பழனிசாமி கங்குவா படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சுமார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் படத்தின் வசூல் பட்ஜெட்டை எட்டவில்லை.

இந்தாண்டு வெளியான படங்களிலே அதிகளவு விமர்சனங்களை எதிர்கொண்ட திரைப்படமாக கங்குவா அமைந்தது. சூர்யா மீதான தனிப்பட்ட விமர்சனங்கள், படத்தின் மீதான விமர்சனத்தை விட அதிகளவு இருந்தது. சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா  படத்தின் மீதான விமர்சனத்திற்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

கங்குவா படம் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் வெளியாகியது. இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், நடராஜன், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி, கோவை சரளா, மன்சூர் அலிகான், கருணாஸ், போஸ் வெங்கட், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola