தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்டப் பாதுகாப்பு உள்ளது, தமிழகத்தில் இட ஒதுக்கீடு முழுமையாக பாதுகாக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 


மகாராஷ்டிராவில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் 50 சதவீதமாக குறைத்துள்ளது, இந்த வழக்கை மேற்கோள்  காட்டி தமிழகத்திலும் இட ஒதுக்கீடு குறைக்கப்படலாம் என்ற கருத்து பேசப்பட்ட  வந்தது, இந்த சூழலில் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு குறித்து அதற்கான சட்டப் பாதுகாப்புகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தது. 




‛‛இந்த ஆலோசனையில் மகாராஷ்டிரா மராத்தா இட ஒதுக்கீட்டை 50% ஆக குறைத்துள்ளது உச்சநீதிமன்றம் எனவும் தமிழகத்தில் பின்பற்றும் 69% இட ஒதுக்கீடு காப்பாற்றுவது பாதுகாப்பது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசித்தார், ’’என்றார். மேலும், ’69% இட ஒதுக்கீட்டிற்கு சட்டப்பாதுகாப்பு உள்ளது, உரிய அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை வெற்றிகரமாக நடத்தி தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும்,’  என்றார். இடஒதுக்கீடு தொடர்பாக மகாராஷ்டிரா நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திரா சகானி என்ற தீர்ப்பை மேற்கோள் காட்டியே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், தமிழ்நாட்டில் செயல்படுத்தி வரும் 69 சதவீத இட ஒதுக்கீட்டில் எந்த சிக்கலும் இருக்காது சட்டத்துறை அமைச்சர் தெரிவித்தார். 




69 சதவீத இட ஒதுக்கீட்டின் சட்டத்தை நிறைவேற்றும் போது நாம் சட்டப்பாதுகாப்பு செய்ததால் இட ஒதுக்கீட்டிற்கு எந்த சிக்கலும் ஏற்படாது, இருந்தாலும் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை முழுமையாக படித்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பதற்காக ஆலோசிக்கப்பட்டதாக சட்டத்துறை அமைச்சர் தெரிவித்தார்


உச்சநீதிமன்றம் தீர்ப்பை முழுமையாக வாசித்து அரசு சட்ட வல்லுநர்கள் அடுத்தக்கட்ட முடிவு எடுப்பார்கள் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். 


ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்கள் 30 ஆண்டுகள் சிறையில் உள்ளனர். கருணை அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் திமுக தேர்தல் அறிக்கையிலும் சொன்னது போல,
ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக முதலமைச்சர் நல்ல முடிவெடுப்பார். இதுகுறித்து முதலமைச்சர் விரைவில் ஆலோசிக்க உள்ளார், என்றார்