சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார்.


முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், தமிழகத்தில் நீண்ட நாட்களாக சிறையில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசிகளாக உள்ள நபர்களை முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் அன்று கருணை அடிப்படையில் தமிழக அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற 20 ஆம் தேதி சென்னையில் மாலை 4 மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். தொடர்ச்சியாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆரம்பித்த காலம் முதல் கூறி வருகிறோம், தமிழ்நாடு அரசு தமிழக மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவர்களை உறுதி செய்யும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமூகத்தினருக்கும் பாரபட்சம் அற்ற சமூக நீதியை வழங்க தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவ செல்வங்களை சாதி அடிப்படையில் பார்க்காமல் உரிய சட்டம் இயற்றி சாதி வாரி கணக் கெடுக்க வேண்டும் என்றார். அந்தந்த சமூகத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீடு செய்திட வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் கோட்டை நோக்கி செல்லவும் முடிவு செய்து இருக்கிறோம். 



இரும்பு வணிகம், எலக்ட்ரானிக்ஸ், மஞ்சள் வணிகம், முந்திரி ஏற்றுமதி இறக்குமதி வட நாட்டினர் கையில் சென்றுவிட்டது. ஜவுளி தொழில் வடநாட்டினர் கைகளுக்கு சென்று கொண்டிருக்கிறது. 90 சதவீதம் சிறு வியாபாரம் அவர்களிடம் சென்று விட்டது. தமிழர்கள் கனவில் இருக்கின்றனர். அவர்கள் விழித்து கொள்ள வேண்டும். தமிழத்தில் பல தேர்வுகளை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. மருத்துவ கல்வியில் 50 சதவீதம் அவர்கள் எடுத்து கொள்கின்றனர். அஞ்சல் துறையில் சேர இந்தி ஆங்கிலத்தில் விண்ணப்பம் இருந்தது. நாங்கள் தமிழில் வேண்டும் என்று கேட்டோம். விண்ணப்பம் மட்டும் தமிழில் தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். விமானத்தில் தமிழில் அறிவிப்பு இல்லை. தமிழர்கள் விழித்து கொள்ள வேண்டும். தமிழர்களின் வேலை வாய்ப்பை பறிக்க கூடாது. தமிழகத்தில் உரிமை கொஞ்சம் கொஞ்சமாக பறி போகிறது. நாங்கள் எந்த இனத்திற்கு எதிரானவர்கள் இல்லை. இன்னும் எதையும் இழக்க தயாராக வில்லை. வருபவன் யார்? எதற்காக வருகிறான் என பார்க்க வேண்டும். தமிழகத்தில் ஆயுத குழுக்கள் உருவாக்க கூடாது. சட்டரீதியாக சட்டத்தை இயற்ற தமிழக அரசை கேட்டு கொள்கிறோம். அந்தந்த மாநில முதலமைச்சர்கள் அந்த மாநில மக்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். முறையாக சட்டங்களை இயற்ற வேண்டும். தமிழகத்தில் தமிழ் தெரியாமல் ஆராய்ச்சி படிப்பு வரை படித்து முடிக்க முடியும். இந்த நிலையை மாற்றி ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கூறினார்.



ஆன்லைன் சட்டத்தில் கையெழுத்திடாத தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும். இல்லை யெனில் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். பிற மொழியை படிக்க வேண்டும் என கட்டாயப் படுத்த கூடாது. வட மாநிலத்தினர் சிலர் இங்கு வன்முறையில் ஈடுபடுகின்றனர். ஹோலி பண்டிகையின் போது பெண்ணை தாக்கி உள்ளனர். எச்.ராஜா தமிழனத்திற்கு ஆண்மை இல்லை என கூறி இருக்கிறார். நான் எதிர்த்தால் கண்டிக்கின்றனர். முதலமைச்சரை தரக்குறைவாக பேசுகிறார். இங்கு கலவரத்தை வெடிக்க பார்க்கிறார்கள். தமிழகம் எதிர்த்து நின்று மாமன் மச்சானாக இருக்கும். சமூக நல்லிணக்கத்துடன் தமிழகம் இருக்கும். தவறாக பேசும் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.


சனாதன நாட்டில் தான் வாழ்கிறோம். சமூக நீதி இங்கு இல்லை. இந்தியா பிளவு படாமல் இருக்க விரும்பு கிறோம். நாம் சகித்து வாழ்ந்து வருகிறோம். நாங்கள் பேசினால் பிரிவினை வாதிகள் என்று கூறுகின்றனர். ஒட்டு மொத்த தமிழர்களுக்காக போராடி வருகிறோம். பென்னாகரத்தில் பொது கூட்டம் நடத்த அனுமதி தரவில்லை கொடி ஏற்ற அனுமதி தரப்படுவது இல்லை. மேட்டூரில் ஒரு மீனவனை கர்நாடக அரசு சுட்டு கொன்றது. எதற்காக அங்கு சென்றார் என விசாரிக்க வேண்டியது தானே. ஏன் சுட்டார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அங்கு சென்று விசாரித்து இருக்க வேண்டும். ஏன் விசாரிக்க வில்லை. 16 ஆட்சி தலைவர்கள் ஒரே மாவட்டத்தில் இருந்து வந்துள்ளனர். எந்த கட்சியும் இதை கேட்கவில்லை. நான் மட்டுமே கேட்கிறேன். கூட்டணியில் இருந்தாலும் நியாயத்தை கேட்கிறேன். தவறு நடப்பதை சுட்டி காட்டுகிறேன். இதை வட நாட்டு அதிகாரிகளால் பொறுத்து கொள்ள முடிய வில்லை. 


எங்கும் தமிழ் இருக்க வேண்டும். இதை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. ஆனால் சனாதன ஆட்சி வர வேண்டும். NLC நிலத்தை கையகப்படுத்த கூடாது என கூறி வருகிறோம். முதலமைச்சரை சந்தித்து பேசினோம். இதனால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டு உள்ளது. உரிய இழப்பீடு தருவதாக NLC தெரிவித்து உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் என்ன விரும்புகிறார்களே அதன் படி அரசு செய்து தர வேண்டும். சென்னையில் இரண்டு சுங்க சாவடிகள் நீக்கப்பட்டு உள்ளது. இது போல் சேலத்தில் ஒன்றும், திருவள்ளூரிலும் சுங்க சாவடிகள் அகற்றப்பட வேண்டும். மேலும், தமிழக பூர்வ குடி மக்களுக்கான புதிய சட்டம் குறித்து முதல்வர் கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டார். சிறுபான்மையின மக்கள் உட்பட தமிழகத்தில் பூர்வ குடியதாக உள்ள ஏழு கோடி தமிழர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் சட்டம் நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறினார்.