பிப்ரவரி 21 தாய் மொழி நாளை முன்னிட்டு, பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மேற்கொள்ளும் “தமிழை தேடி” என்கின்ற விழிப்புணர்வு பரப்புரை பயணம் தொடர்பான பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கௌரவ தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு விழிப்புணர்வு பரப்புரை பயணம் தொடர்பாக திட்டமிட்டிருக்கும் நிகழ்ச்சிகள் குறித்தும்,




சென்னை முதல் மதுரை வரை நடைபெற உள்ள இந்த பயணத்தில் கட்சியினரும் பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ள அழைப்பு விடுத்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் முதல்முறையாக அரசியல் களப்பின்றி தாய் மொழியாம் தமிழ் மொழியின் மேன்மையை, தொன்மையை இக்கால சமுதாயத்தினருக்கு தெரியப்படுத்தும் வகையிலும், தமிழ் மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழின் தாயகமாம் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலிருந்தும் காணாமல் போன “தமிழைத் தேடி” என்கின்ற விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை மருத்துவர் ராமதாஸ் மேற்கொள்ள இருக்கிறார். 


Maha Shivaratri 2023 : மகா சிவாராத்திரி.... 'ஆதியோகி ரத யாத்திரை'.... வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்...




இதில் தமிழ் அறிஞர்கள், தமிழ் இசைவாணர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். பல்வேறு நிகழ்ச்சிகளும் இதில் இடம்பெற இருக்கின்றன. தமிழைத் தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணமானது எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. தமிழ்நாட்டில் தாய்மொழி பாதுகாக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் கட்டாயமாக தாய்மொழி ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பது போன்ற மொழியின் பற்றை உணர்த்துவதற்காக மட்டுமே இந்த விழிப்புணர்வு பரப்புரை பயணம் நடைபெற உள்ளது” எனத் தெரிவித்தார். இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் பழனிசாமி, நிர்வாகிகள் தங்க அய்யாசாமி, சக்திவேல், ஐயப்பன், காமராஜ், கணேசன், காசிபாஸ்கரன், முருகவேல், கமல்ராஜா, பூபதி உள்ளிட்ட பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.