தி.மு.க., அமைப்பு செயலாளரும், எம்.பி.,யுமான ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தேர்தல் பரப்புரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக கூறியுள்ள ஆர்.எஸ்.பாரதி,  மொபைல் போன்களுக்கு முதல்வர் குரலில் வரும் அழைப்பிலும் திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருப்பதாகவும்,

தேர்தல் நடத்தை விதிகளை மீறி, திமுக குறித்து தொலைபேசி வாயிலாக அவதூறு பரப்பும் IVRS அழைப்புகளுக்கு தடைவிதிக்கக்கோரி, கழக அமைப்பு செயலாளர் திரு. @RSBharathiDMK MP அவர்கள், தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள புகார் விவரம்:

Link: https://t.co/mfcv1ZIluK#DMK #TNElection2021 pic.twitter.com/zD9wCSw3cW
— DMK (@arivalayam) March 30, 2021

கடந்த 28ம் தேதி சென்னை தியாகராயநகரில் நடந்த முதல்வர் பரப்புரையில், திமுக தலைவர் ஸ்டாலின் குறித்த தனிநபர் விமர்சனங்கள் இடம் பெற்றிருப்பதால், தேர்தல் விதிமுறைகளை மீறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.