இல கணேசனின் அண்ணன் இல கோபாலன் அவரில் 80வது பிறந்தநாள் விழா அவர்து இல்லத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துக்கொண்டுள்ளார்.  


மணிப்பூர், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் ஆளுநர் இல.கணேசனின் மூத்த சகோதரர் கோபாலன் அவர்களின் 80வது பிறந்தநாள், நவம்பர் 3-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்தநாள் விழா  அவரது சென்னை இல்லத்தில் கொண்டாடப்படுகிறது. அதில் பங்கேற்க மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு இல.கணேசன் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று, சென்னையில் அந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்பார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. மேற்கு வங்க முதல்வர் மட்டுமல்லாமல் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமூகர்களுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  


தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி  முதலமைச்சர் ஸ்டாலினை நேற்று அவரது இல்லத்தில் நேரில்  சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்துக்கு வந்த மம்தா பானர்ஜியை, வாசலுக்கு வந்து ஸ்டாலின் வரவேற்றார்.


இல கணேசன் இல்ல விழாவில் பலரும் கலந்துக்கொள்ள உள்ளனர். முக்கியமாக மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துக்கொண்டுள்ளார். அவர் இவ்விழாவில் கலந்துக்கொள்ள வருகை புரிந்தபோது வாசலில் ஜண்டை மேளம் வாசிப்பு இருந்தது. அதனை கண்டுகளித்த முதலமைச்சர் சற்று நேரம் அவரும் அந்த ஜண்டை மேளத்தை வாசித்தார்.






மம்தா பானர்ஜியை தொடர்ந்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்துக்கொண்டார். சிங்க நடை போட்டு ரஜினிகாந்த் இவ்விழாப்விற்கு வருகை தந்தார். முன்னதாக நேற்று இவர் கர்நாடகாவில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துக் கொண்டார். கன்னட ராஜ்யோத்சவா தினமான நேற்று மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டது. புனீத் சார்பாக அவரது மனைவி அஸ்வினி இந்த விருதை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் கலந்து கொண்டு விருதை வழங்கினர். 


இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் கன்னடத்தில் பேசியது அங்கு வந்திருந்த ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. முதலில் நடிகர் ரஜினி பேசத் தொடங்கியதும் மழை பெய்யத் தொடங்கியது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் புனீத் ராஜ்குமார் பற்றி அவர் பேசியதை கேட்டு ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்தனர். அப்போது பேசிய ரஜினிகாந்த் “ அனைவருக்கும் கன்னட ராஜ்யோத்சவா வாழ்த்துக்கள். புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் கூடினர். அது அவர் நடிகர் என்பதால் வந்த கூட்டம் அல்ல அவரின் மனிதாபிமானம் மற்றும் ஆளுமைக்காக வந்த கூட்டம். புனிதத்தின் ஆளுமை சிறப்பானது. அவர் கடவுளின் குழந்தை” என உருக்கமாக பேசினார்.




நேற்று கர்நாடகா அரசு தரப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, இன்று மீண்டும் சென்னை வந்து இல. கணேசன் அண்ணன் இல கோபாலன் அவரின் 80 பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்டார். மம்தா பானர்ஜி , ரஜினிகாந்த், தமிழிசை சௌந்தராஜன் உள்ளிட்டோரும் கலந்துக்கொள்கின்றனர். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் கலந்துக் கொள்கிறார். அரசியல் தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்துக்கொள்வதால் இந்த விழா முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.