முதலமைச்சர் ஸ்டாலின், அரியலூர் மாவட்டம், ஜெயம்கொண்டம், சிப்காட் தொழிற்பூங்காவில் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன்ஷூஸ் (DeanShoes) நிறுவனம் அமைக்கவுள்ள காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்


தொடர்ந்து "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எல்லா மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:


திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் கட்சியை, தேர்தலை, அரசியலைத் தாண்டி செய்யும் முன்னெடுப்புகள். மிக மிக நலிந்த மக்களுக்கான ஆட்சியாக இந்த ஸ்டாலின் ஆட்சி இருக்கும்.


தந்தையாக செய்து கொடுக்கிறேன்


குழந்தைகள் தங்களுக்குத் தேவையானதைக் கேட்க முடியாது. அவ்வாறு கேட்க முடியாதவர்களுக்கான ஆட்சி இது. ஒரு தந்தையாக, குடும்பத்தில் ஒருவனாக இதையெல்லாம் செய்து கொடுக்கிறேன். காலை உணவு, தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டம் மூலம் நான் பலன் அடைந்தேன் என்று பின்னாட்களில் எல்லோரும் கூற வேண்டும். நிச்சயம் சொல்வார்கள்.


 வரலாற்றில் ஸ்டாலின் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும்


இவற்றால் வரலாற்றில் திராவிட மாடல் அரசும் அதை வழிநடத்துகிற ஸ்டாலின் பெயரும் அழிக்க முடியாதபடி, என்றென்றும் நிலைத்திருக்கும். திராவிட மாடல் அரசுக்கு மக்களாகிய நீங்கள் என்றும் ஆதரவு தர வேண்டும்.


இவ்வாறு முதல்வர் ஸ்டலின் தெரிவித்தார்.