Singa Penne Elunthu Vaa: "அன்புமணியை தொடர்ந்து, சௌமியா அன்புமணியும் தமிழக முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதால் பாமகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்"
அன்புமணியின் உரிமை மீட்பு பயணம்
பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி பிரச்சனைகள் இருந்தாலும், தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாசை பாமக தலைவர் தொடர்வதாக அறிவித்துள்ளது. கட்சியில் உட்கட்சி பிரச்சினை இருந்தாலும், தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
தமிழ்நாடு முழுவதும் மக்கள் உரிமை 108 நாட்கள் மீட்பு பயணம் என்ற பயணத்தை, அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கிய, உரிமை மீட்பு பயணத்தை தர்மபுரியில் முடித்தார். அன்புமணியை தொடர்ந்து பசுமை தாயகத்தின், தலைவர் சௌமியா அன்புமணியும் மகளிர் உரிமை மீட்பு பயணத்தின் மேற்கொள்ள உள்ளார்.
மகளிர் வாக்குகளை தவிர ஆலோசனை
பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை, துவக்காலத்திலிருந்தே மகளிர் வாக்குகளை மையமாக வைத்து மது ஒழிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து பெண்களை பாமகவிற்கு கொண்டு வர அன்புமணி ராமதாஸ் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளார். தர்மபுரியில் வேட்பாளராக சௌமியா அன்புமணி போட்டியிட்டபோது, பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
இதனால் தமிழ்நாடு முழுவதும் சௌமியாவை சுற்றுப்பயணம் மேற்கொள்ள, கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணியிடமும் கட்சியினர், சௌமியாவை தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆலோசனைகள் வழங்கியதாக கூறப்படுகிறது.
"சிங்கப்பெண்ணே எழுந்து வா"
இதனைத் தொடர்ந்து பசுமைத்தாயகம் தலைவர் சௌமியாவை தமிழ்நாடு முழுவதும், பிரச்சாரம் மேற்கொள்ள அன்புமணி ராமதாஸ் அனுமதி வழங்கி உள்ளார். மக்கள் உரிமை மீட்பு பயணத்தின் 2.0 திட்டத்தின் மூலமாக, சௌமியா அன்புமணியின், "சிங்கப்பெண்ணே எழுந்து வா" என்ற பெயரில் மகளிர் உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த மகளீர் உரிமை மீட்பு பயணத்தில், பெண்களுக்கான 10 உரிமைகளை மையமாக வைத்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
எதற்காக இந்த பயணம் ?
இதுகுறித்து பாமக தரப்பில் கூறுகையில், "உலகிலே மகளிருக்கு மிக அதிகம் மரியாதை வழங்கும் சமுதாயம் தமிழ் சமுதாயம். பெண்களை கடவுளுக்கு மேலாக வைத்து வழிபாடும் சமுதாயம் தமிழ் சமுதாயம் தான். ஆனால் அவர்களுக்கான மரியாதை வழங்குவது கிடையாது. இதனால் அதிகாரத்தில் பெண்களுக்கு சம வாய்ப்பு, மதுபானத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான பெண்களின் உரிமை, வன்முறை இல்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, போதைப் பொருளால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான உரிமை, கல்வியும் பயிற்சியும் பெண்களின் உரிமை, உணவு-வீட்டு வசதி-குடிநீர்-துப்புரவு & மருத்துவ சேவை பெண்களின் உரிமை, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் பெண்களின் உரிமை, அடிப்படை சேவைக்கான உரிமை, சமூக பாதுகாப்பு பெண்களின் உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை மற்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைப்புக்கான உரிமை ஆகிய 10 உரிமைகளை முன்வைத்து பிரச்சாரம் நடைபெற உள்ளது.
காஞ்சியில் இருந்து துவக்கம்..
மகளிர் உரிமை மீட்பு பயணத்தை சௌமியா அன்புமணி, ஆன்மீக நகரமான காஞ்சிபுரத்திலிருந்து தூங்குவதை செண்டிமெண்டாக பார்ப்பதாக கட்சியினர் கூறியுள்ளனர். காஞ்சிபுரத்தில் நாளை (06-12-2025) காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனை தரிசித்த பிறகு, தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.