சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் சென்னை மண்டலம் சார்பில் தேசிய அளவிலான பொது விழிப்புணர்வு வினாடி வினா போட்டி மூன்றாவது ஆண்டாக "U Genious 3.0" என்ற பெயரில் நடைபெற்றது.


இந்த போட்டியில் சென்னை நகர் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 500 கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மற்ற விருந்தினர்களுடன் இணைந்து குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.


இந்த போட்டியில் இந்தியா முழுவதும் உள்ள ஒரு லட்சம் அளவிலான மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள்  அடுத்தட்கட்டமாக  கோயம்புத்தூரில் அக்டோபர் மாதம் ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 


ஏற்கனவே திருச்சி, சேலம், மதுரை, கொச்சியில் இந்த வினாடி வினா போட்டிகள் நடைபெற்று வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


ஒட்டுமொத்தமாக வெற்றி பெறுபவர்களுக்கு இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.வரும் நவம்பர் 7 ஆம் தேதி இதன் இறுதி போட்டி மும்பையில் நடைபெற உள்ளது.


நிகழ்ச்சி மேடையில் பேசிய இராதாகிருஷ்ணன் ; 


வரும் காலங்களில் உலக அளவில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால் படிப்பும், திறமையும் மிக முக்கியம்.


வேகம், கவனம், நேரம், கல்வி, உங்கள் திறனை மேம்படுத்துவது உள்ளிட்ட பல விசயங்கள் இந்த வினாடி வினா போட்டி மூலம் கிடைக்கும். இது மாதிரியான போட்டிகள் சிவில் சர்வீஸ் தேர்வு போன்றவற்றிற்கு எல்லாம் முதல் படி போன்றது. 


இது போன்ற வினாடி வினா போட்டிகளை நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கு நடத்துவதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன் ; 


இந்த வினாடி வினா போட்டி மாணவர்கள் மத்தியில் பல்வேறு திறமைகளை மேம்படுத்தும் ஊக்குவிக்கும். 


கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வளங்கள் துறை பொருத்தவரை பறந்து விரிந்த துறை. 35,000 நியாய விலை கடைகளை மட்டும் பார்க்கிறார்கள். சுவிட்சர்லாந்து நாட்டில் எல்லாம், கூட்டுறவு கடைகள் அதிகம் இருக்கும். 


தமிழகத்தை பொறுத்தவரை 26 வகையான கூட்டுறவு வங்கி கடன்கள் வழங்கப்படுகின்றன. மக்களால் செயல்படக்கூடியது தான் கூட்டுறவுத்துறை. இந்த ஆண்டுக்கான நெல் கொள்முதல் இந்த செப்டம்பர் மாதம் தேவைக்கேற்ப விவசாய சங்கங்களிடம் பேசி நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்க மாவட்ட ஆட்சியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


முதன் முதலில் கூட்டுறவு வங்கிகளும் சங்கங்களும் தமிழகத்தில் தான் தொடங்கியுள்ளன. நபார்டு வங்கி மூலம் விளிம்பு நிலையில் உள்ள நாட்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது.


பால் மீன் கூட்டுறவு துறைகளும் உள்ளன. அது குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 


நியாய விலை கடைகளை பொருத்தவரை ஏதாவது ஒரு இடத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கிறது. அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அரிசி கடத்தலை தடுக்க வேண்டும் வாங்காதவர்களுக்கு பொருட்கள் கொடுக்கக் கூடாது. இது உணவு பாதுகாப்பு திட்டம் இதனை சத்துணவு பாதுகாப்பு திட்டமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.


எல்லைப் பகுதிகள் மட்டும் இல்லாமல் உட்புற நகரங்களிலும் கடத்தல் தொடர்பான விஷயங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது யார் தலையீடு இருந்தாலும் அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 


மழைக்காலங்களைப் பொறுத்தவரை கூட்டுறவுத் துறையில் தேவையான பொருட்களை ஸ்டாக் வைத்திருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளை பாதுகாப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.