ஜி.கே மணியை சந்தித்த செல்வப்பெருந்தகை
சென்னை வானகரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பா.ம.க சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே மணியை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஒரு மணி நேரமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
அதன் பின்னர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசுகையில் ;
உடல் நலமில்லாமல் ஜி.கே மணி மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் நட்பு ரீதியாக அவரை சந்தித்தேன். அவர் நலமுடன் இருக்கிறார். 25 ஆண்டுகளுக்கு மேலாக நட்பு ரீதியாக இருக்கிறார். சட்டமன்ற கூட்டத் தொடரில் தன்னுடைய இருக்கைக்கு அருகிலேயே அமருவார் அந்த நாள் உடல் நலம் குறித்து நேரில் விசாரித்ததாக தெரிவித்தார்.
உட்கட்சி பிரச்சனைக்கு ஜி.கே மணி காரணமா ?
மேலும் இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்றும் விளக்கம் அளித்தார். பாமக.வில் உட்கட்சி பிரச்னை இருந்தாலும் கட்சியின் நலனுக்காக வளர்ச்சிக்காக ஜி.கே மணி செயல்பட்டு இருக்கிறார். உடல் நலம் தேறிய பின்னர் மீண்டும் கட்சி பணிகளை அவர் மேற்கொள்வார். உட் கட்சி பிரச்னைக்கு ஜி.கே.மணி காரணம் என்ற ஐயம் இருக்க கூடாது. கட்சியில் ராமதாஸ், அன்புமணி உறவுக்கு முக்கியமானவராக இருப்பார்.
முருகன் மாநாடு நடத்தினால் மக்கள் ஏற்று கொள்வார்களா ?
முருகன் மாநாடு நடத்துவது என்ன தகுதி இருக்கிறது. தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய எதிர்ப்பு தெரிவித்தவர்கள். இன்று முருகன் மாநாடு நடத்தினால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா ? அயோத்தியில் கூட ராமர் பா.ஜ.க வை கைவிட்டார். அது போல் தமிழகத்தில் முருகர் கைவிடுவார் என பதில் அளித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மருத்துவரணிச் செயலாளரும் , சட்டமன்ற உறுப்பினருமான மருத்துவர் எழிலன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கீழடி ஆய்வு குறித்தும் அதன் வரலாறு குறித்தும் செய்தி வலம் வருகிறது. தமிழ்நாடு முதல்வர் அவர்கள் கீழடிக்காக மேற்க்கொண்ட பணிகள் , மாணவரணி போராட்டம் உள்ளிட்டவை பற்றி அனைவரும் அறிந்ததே.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கீழடி குறித்து அறிக்கை விட்டார்கள். அதில் பல எடுத்துக்காட்டுகள் இருந்தன. அப்போது தங்கம் தென்னரசு அவர்களும் கனிமொழி எம்.பி அவர்களும் நேரடியாக சென்றார்கள். திமுக சார்பில் வழக்குகள் தொடர்ப்பட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் அதிமுக நிலையை கொண்டு வந்தார்கள். முதன் முதலில் சட்டமன்றத்தில் கீழடி ஆய்வு குறித்து கொண்டு வந்தவர் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தான்.
ஆய்வு குறித்து வரலாற்று பின்னனியில் உலகத்தரத்தில் அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதல்வர் அவர்கள் கொண்டு வந்தார்கள். நிதி ஒதுக்கீடு குறித்து ஆர்.பி.உதயகுமார், மா.பா பாண்டியராஜன் தவறான தகவல்களை தெரிவித்துள்ளார்கள். திமுக அரசு கீழடி, சிவகளை, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 2021-2024 வரை 30 இடங்களில் 38 ஆய்வு செய்து 27 கோடி நிதி ஒதுக்கி பணிகள் செய்துள்ளார்கள்.
அதிமுக ஆட்சி 1கோடி திமுக 27கோடி இரண்டிற்கு மிகப்பெரிய வித்தியாசமுள்ளது. அப்போது இருந்த அதிமுக அரசு ஆய்வு நடக்கும் போது ஒருமுறை கூட சென்று பார்க்கவில்லை. அமர்நாத் அவர்களை மாற்றப்படும் போது தொடர்புக் கொண்டு பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறுகிறார்கள் ஆனால் நான் அமர்நாத் அவர்களிடம் பேசி விட்டு தான் வருகிறேன் அப்படி யாரும் பேசவில்லை அவரிடம் சந்தேகமிருந்தால் அவரையே நீங்கள் கேட்கலாம்.
உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் ஒரு கோடி நிதி ஒதுக்கியுள்ளார்கள் ஆனால் திராவிட மாடல் அரசு உண்மையின் அடிப்படையில் நிதி ஒதுக்கியது. 5300ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களை இரும்பினை கையாண்டவர்கள் என தமிழ்நாடு சட்டப் பேரவையில் அதிகாரபூர்வமாக ஆதாரத்தோடு அறிவித்தார்கள். பல்வேறு அறிவியல் ஆய்வு உண்மைகளை கண்டறிந்து வெளிக் கொண்டு வந்தார்கள்.
எடப்பாடி பழனிசாமி கேளி சித்திரங்கள் குறித்து வழக்கு கொடுப்பது போன்ற செயல்கள் தொடர்பான கேள்விக்கு ?
அரசியலில் பேரறிஞர் அண்ணா , கலைஞர் , நம் தமிழ்நாடு முதல்வர் வரை கேளி சித்திரங்களை செய்துள்ளார்கள்.ஆனால் அரசியல் பக்குவம் என்பது அவசியம் ஆனால் இப்போது இவர்கள் கீழடி விவகாரத்தை திசை திருப்ப இவ்வாறு செய்கிறார்கள். 100% அல்ல 300% தரவுகள் நம்மிடம் கேட்பார்கள். அயோத்தி வழக்கில் ஒரு ஆதாரம் கொடுத்தார்களா ?ஜனநாயக நாட்டில் மக்கள் தான் தீர்மானிப்பார்கள் அவர்களுக்கு தெரியும். தேர்தல் வாக்கு அரசியலுக்கும் தொண்மை அரசியலுக்கும் தொடர்புள்ளது அவர்களுக்கு நன்றாக தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக முடிவெடுத்து காத்திருக்கிறார்கள்.