தமிழக அரசு நடத்திய மாநாடு திமுக மாநாடு, நாங்கள் நடத்துவது தான் முருக பக்தர்கள் மாநாடு, திமுக மொழியின் ரீதியாக மக்களை பிரிக்க நினைக்கிறது. - ஹெச்.ராஜா பேட்டி

அறுபடை வீடுகளின் அரங்கு காட்சிகளை பார்வையிட்ட ஹெச்.ராஜா
 
மதுரையில் ஜூன் 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் அரங்கு காட்சிகளை பா.ஜ.க., மூத்த தலைவர் ஹெச்.ராஜா பார்வையிட்டு தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க., மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறுகையில் "முருக பக்தர்கள் மாநாட்டுக்காக நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்து விரோத தீய சக்திகள் குறைக்கக்கின்றன. இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு முருக பக்தர்கள் மாநாட்டிற்கு மக்களை போக சொல்லியிருக்க வேண்டும்.
 
திமுகவினர் போலியாக நெற்றியில் திருநீரை பூசி வருகிறார்கள்.
 
தமிழக அரசு நடத்திய முருகன் மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் இது ஆன்மீக மாநாடு அல்ல என பேசினார். தமிழக அரசு நடத்திய மாநாடு திமுக மாநாடு, நாங்கள் நடத்துவது தான் முருக பக்தர்கள் மாநாடு, திமுக மொழியின் ரீதியாக மக்களை பிரிக்க நினைக்கிறது. தமிழர்கள் என்றாலே இந்துக்கள் தான், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் பவன் கல்யானை எதிர்க்க சேகர் பாபு யார்?. திமுகவினர் முருகனின் துரோகிகள், எதிரிகள், திமுக இந்து கோவில்களை மையப்படுத்தி கொள்ளையடித்து வருகிறது. திமுகவினர் போலியாக நெற்றியில் திருநீரை பூசி வருகிறார்கள்.
 
முருகன் கோவிலில் வைத்த திருநீரை அழிக்கும் திருமாவளவன் இந்து விரோதி
 
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் பக்தர்களை தடுக்கும் அதிகாரிகள் குடும்பத்தோடு அழிய வேண்டுமென கடவுளிடம் வேண்டுகிறோம். 9 மாதங்கள் இந்துக்கள் பொறுத்து கொள்ள வேண்டும். 2026 க்கு பின்னர் திமுக அழிந்து போய் விடும். திருமாவளவன் ரம்ஜான் நோன்பு கஞ்சியை கடைசி சொட்டை கூட குடிக்கும் வரை தலையில் தொப்பி வைத்திருப்பார். ஆனால் முருகன் கோவிலில் வைத்த திருநீரை அழிக்கும் திருமாவளவன் இந்து விரோதி" என பேசினார்.