Seeman: கடலில் பேனா நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்பேன் என கருத்துக் கேட்பு கூட்டத்தில் சீமான் பேசியுள்ளார். 


மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வர் மு.கருணாநிதிக்கு நாங்கள் நினைவுச் சின்னம் வைப்பதை எதிர்க்கவில்லை. ஆனால் கடலுக்குள் நினைவுச்சின்னம் அமைப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மேலும், கடலில் பேனா நினைவுச் சின்னம் வைத்தால், அந்த நினைவுச் சின்னத்தை உடைப்பேன் எனவும் அவர் பேசியுள்ளார். கடலில் நினைவுச் சின்னம் வைத்தால் கடலில் கல்லைக் கொட்ட வேண்டும் இதனால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும் எனவும் பேசி, கருத்து கேட்பு கூட்டத்தில் பேனா சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  


மேலும், பேனா சிலை கடலில் வைக்க முட்பட்டால், அதனை தடுத்து நிறுத்தும் வரை கடுமையாக போராடுவேன் எனவும் பேசியுள்ளார். 


மறைந்த முன்னாள் திமுக தலைவர் மற்றும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு  பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரீனாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்  இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கத்தினர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலில் நினைவுச் சின்னம் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.