மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மற்றும் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா ஆகியோர் விலகினர்.


நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், 234 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. ஆனால், எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் சமீபத்தில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 


இந்தக் கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியில் இருந்து துணைத் தலைவர் மகேந்திரன் வில்கினார். அத்துடன், கமல் மற்றும் கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். அவர் விலகிய பிறகு மக்கள் நீதி மய்யம் பற்றியே ஒருவாரமாக மக்கள் மற்றும் ஊடகத்தினர் மத்தியிலும் பேசப்பட்டது. 


இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மற்றும் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா ஆகியோர் விலகினர். தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகுவதாக சந்தோஷ் பாபு விளக்கமளித்தார்.


 


 


இதேபோல், சில காரணங்களுக்காக  கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று பத்மப்ரியாவும் கூறினார்.