தமிழ்நாட்டில் குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு காரணம் காவல் துறையின் செயல்பாடுகளில் திமுகவினர் தலையிடுவது தான் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழ்நாடு சிவசேனா கட்சியை பாஜகவுடன் இணைக்கும் நிகழ்ச்சி சென்னை பட்டாளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சிவசேனா கட்சியின் மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்ட தங்களை பாஜகவுடன் இணைத்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசுகையில், “தமிழக டிஜிபி பதவி என்பது நடுநிலையாக அனைத்து கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாட்டில் உள்ள எட்டரை கோடி மக்களுக்கும் நியாயம் நீதி வழங்கக்கூடிய பதவி. ஆகவே டிஜிபி சைலேந்திர பாபு நடுநிலையாக இருக்க வேண்டும். திமுக சமூக வலைதளங்களில் வரும் போஸ்ட் எப்படி இருக்கிறது. பாஜக போஸ்ட் எப்படி இருக்கிறது என நீங்களே பார்க்கலாம். இருவருக்கும் சமமாக இருக்க வேண்டும். ஆனால் சமமாக இல்லை நடுநிலையாக டிஜிபி இருக்க வேண்டும்” என்றார்.
மேலும் பேசிய அவர், “ஆளுங்கட்சி தலையீடு அனைத்து இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் காவல் துறையின் செயல்பாடுகளில் திமுகவினர் தலையிடுவது தான். மாநில, மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் ஆளும் கட்சி என்று சொல்லிக்கொண்டு காவல்துறையினருக்கு இடையூறு செய்கின்றனர்.
ஆட்சியில் இல்லாத போது Gobackmodi என்று சொல்லி இருந்தாலும், தற்போது ஆட்சியில் உள்ளார்கள்.
பாரத பிரதமரின் வருகையை தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தமிழ்நாடு அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு முதலமைச்சர் இருப்பார் என நம்புகிறோம்” என்றார்.
தமிழகத்தில் திமுகவினர் குரு நில மன்னர்கள் போல ஒரு குடும்பத்தில் இருந்து வருபவர்கள் மட்டும் ஆட்சி செய்வது பாஜக வின் சித்தாந்தம் இல்லை என்று கூறிய அண்ணாமலை, பாஜகவில் கடைசி நிலை தொண்டனும் முதல்வர் ஆகலாம் என்றும் கூறினார்.
கே.எஸ்.அழகிரி பாஜகவை விமர்சித்து இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
கே.எஸ்.அழகிரி அவர்கள் ஒரு பல்லில்லாத பாம்பாக கட்சியில் செயல்பட்டு வருகிறார். கட்சியில் தவறு செய்பவர்களை கூட கண்டிக்க முடியாமல் உள்ளார். அவருக்கு All the best என்று கூறினார்.
கேரளாவில் படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட பாஜக நிர்வாகி விவகாரத்திற்கு தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறினார். கம்யூனிஸ்ட்கள் கேரளாவை கொலைகள் நடக்கும் இடமாக மாற்றி விட்டனர் என்றும் கேரள முதல்வர் இதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது என்றும் கூறிய அவர், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.
சங்கி என்பது தவறான வார்த்தை என்றும் சீமான் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி என்றும் கூறினார்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்