‘நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் என்னை மாம்பழம் சின்னத்தில் வெற்றி பெறச்செய்த மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிப்படி 2,000 ரூபாய் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்’ என்று சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ் பெயரில் சமூக வலைத்தளத்தில் பரவிய சுற்றறிக்கையால் எம்எல்ஏ அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.


சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ் பெயர் பொறித்து பாட்டாளி மக்கள் கட்சி மாம்பழம் சின்னம் பொரித்த டோக்கனுக்கு வீட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்க ரூபாய் 2,000 வழங்கப்படுகிறது என்று சமூக வலைத்தளத்தில் பரவிய சுற்றறிக்கைகள் சேலம் மேற்கு தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


'இதுதாங்க சோஷியல் மீடியா..' - கருணைக்கொலை கோரிக்கை வைத்த டாக்டர்; உடனே பேசிய அமைச்சர்!


தேர்தல் நேரத்தில் மாம்பழம் சின்னம் பொரித்த டோக்கங்களை தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு வழங்கினேன். நான் கொடுத்த வாக்குறுதிப்படி என்னை வெற்றி பெறச் செய்தார்கள். அந்த நன்றி உணர்வோடு மாம்பழம் சின்னம் பொறித்த டோக்கன் வைத்திருக்கும் நபர்கள் என் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த சுற்றறிக்கையில் பொறிக்கப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக வாக்காளர் அடையாள அட்டை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.




இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ அருள் ராமதாசிடம் கேட்டபோது, “நான் தினமும் காலை முதலே களப்பணிக்கு சென்று இரவு வரை மக்களுக்காக பணியாற்றி வருகிறேன். இதைப் பிடிக்காத சில சமூக விரோதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல கருத்து கணிப்புகள் நான் தோற்று விடுவேன் என்று கருத்து கூறியிருந்தது. அதையும் மீறி 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இந்த சுற்றறிக்கை எனக்கு வேதனை தருவது மட்டுமின்றி என்னை நம்பி வாக்களித்த மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக இருக்கிறது”  என்று  வேதனையுடன் கூறினார்.


மேலும் இதுகுறித்த சைபர் கிரைம் கமிஷனரிடம் புகார் அளித்திருப்பதாகவும் , இதுபோன்று வதந்தி பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். அருள் ராமதாஸ் சட்டப்பேரவை உறுப்பினர் மட்டுமின்றி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைச் செயலாளராகவும், சட்டப்பேரவை பாட்டாளி மக்கள் கட்சியின் கொரடாவாகவும் பதவி வகித்து வருகிறார்.


சட்டப்பேரவை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்ட அருள் ராமதாஸ் 97,127 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சேலத்தாம்பட்டி ராஜேந்திரனை விட 19,907 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


AIADMK legislature party meeting: அதிமுக கொறடா யார்? 14ம் தேதி எம்எல்ஏ.,கள் கூட்டம்