சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கவன ஈர்ப்பு நடைபயணம் சேலத்தில் நேற்று தொடங்கியது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி தலைமைகள் நடைபெற்ற கவன ஈர்ப்பு நடைபயணத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 



நடை பயணத்தின் இடையில் செய்தியாளர்களை சந்தித்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகள் பொதுச் செயலாளர் கொங்கு ஈஸ்வரன் கூறுகையில், சேலம் - உளுந்தூர்பேட்டை சாலை ஆனது உயிர் காவு வாங்கும் சாலையாக மாறி வருகிறது. வருடக் கணக்கில் இச்சாலையில் ஏழு இடங்களில் இரு வழி சாலையாக உள்ள இடங்களில் நான்கு வழி சாலையாக மாற்ற அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அரசாங்கத்தின் காதுகளுக்கு இது எட்டாமல் உள்ளது. இதுகுறித்து முதல் முதலாக 17.05.2021 ஆம் ஆண்டு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மூலமாக டெல்லியில் மத்திய அமைச்சரிடம் கடிதம் கொடுத்தோம். ஒரு ஆண்டிற்கு முன்னால் சட்டமன்றத்தில் இச்சாலை பற்றி நான் விரிவாக பேசினேன். அதெல்லாம் செய்து கூட ஒன்றிய அரசு வேகம் காட்ட வில்லை என்று கூறினார். நான்கு மாதங்களுக்கு முன்பாக மீண்டும் மத்திய அரசிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மூலமாக ஒரு விண்ணப்பத்தை மத்திய அமைச்சர்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தோம். அதன் பிறகு கூட சாலை போடும் வேகம் தெரியவில்லை. எங்களது அழுத்தத்திற்கு பின்னால் சேலத்தில் ஓர் இடத்தில் செல்லியை கொட்டி உள்ளனர். அமைச்சர் நினைத்தால் ஒரே நாளில் இச்சாலையை உள்ள ஏழு இடங்களில் 38 கிலோமீட்டர்கள் நான்கு வழிச்சாலையாக மாற்றி விட முடியும். எத்தனையோ விஷயங்களை சாதனையாக ஒன்றிய அரசு கூறுகின்றது. இந்தச் சாலையை ஒரே நாளில் போட்டு முடித்து சோதனை செய்ய முடியும் என்றார். இதுவரை 1500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சாலையை ஒரு நாள் போடாமல் விட்டால் கூட ஒரு உயிரை இழக்கிறோம். தினசரி ஒரு உயிரை பலி வாங்க கூடிய இச்சாலையை ஒன்றிய அரசு தாமதப்படுத்துவது வேதனையாக உள்ளது என்று கூறினார்.



மாநில அரசு அழுத்தம் கொடுத்தாலும் இவ்வேலைகள் வேகப்படுத்துவதில்லை. இனியும் மத்திய அரசு தமுகப்படுத்தவும் ஒரு வாரம் அல்லது 15 நாட்களில் முடித்துக் கொடுங்கள் என கோரிக்கை வைத்தார். ஒன்றிய அரசு இந்த சாலையை நான்கு வழியைச் சாலையாக மாற்றும் வரை ஒப்பந்ததாரர்களுக்கு சுங்க கட்டணம் மக்களிடத்தில் வசூலிக்க கூடாது என உத்தரவிட வேண்டும். விரைந்து இச்சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும், அப்படி இல்லை என்றால் அதுவரை சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்பதை வலியுறுத்தி தான் இந்த நடைபயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார். வட இந்தியாவில் பல சாலைகள் போடப்பட்டு அதில் பெரிதாக வாகனங்கள் செல்வதில்லை. எனவே உயிர் பலி வாங்கும் இந்த சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறினார்.