புதுவை சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. ஆனால், அந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது.


இந்த நிலையில், புதுவையில் இன்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி புதுவையில் பேசும்போது, காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணியின் மோசமான ஆட்சி புதுச்சேரி வளர்ச்சியை பத்து ஆண்டுகள் பின்னுக்கு தள்ளியுள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. அரசு வேலை தரவில்லை. தனியார் தொழிற்சாலைகளையும் கொண்டு வந்து வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. மோசமான சூழலைக் கடந்த அரசு உருவாக்கிவிட்டது.


                                           


கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை ஆளும் கட்சியினர் எதுவும் செய்யவில்லை. ஒன்றுமே காங்கிரசில் செய்யாததால்தான் அக்கட்சியில் இருந்தே அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வெளியேறி விட்டனர். கூட்டணியில் முதல்வர் பதவி கிடைக்குமா? தருவார்களா? என்ற சிறு குழப்பங்கள், கேள்விகள் எழுப்புகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைமை வகிக்கிறது. முதல்வர் யார் என்ற குழப்பத்துகு வேலையில்லை. அதிகாரச் சண்டையிலேயே ஐந்து ஆண்டு போய்விட்டது. பின்னுக்குத் தள்ளப்பட்ட புதுச்சேரியை முன்னுக்குக் கொண்டு வருவோம். இவ்வாறு அவர் பேசினார்.