தமிழ்நாட்டில் ஏப்ரல் 6--ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களை ஆதரித்து, தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ராசிபுரத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”மக்களின் நலன் குறித்து சிந்திக்காத தலைவர்கள்தான் தற்போது உள்ளனர். பாஜகவுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கொரோனா தொற்றுடன் வாழ்வது பெரிதல்ல. 5000 ஆண்டு தமிழை புறக்கணித்து 400 ஆண்டு ஹிந்தியை படிக்கவேண்டும் திணிக்கிறார்கள்” என்று பேசினார்.