தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களுக்காக தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலினும், பிற தலைவர்களும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். 




உளுந்தூர்பேட்டையில் வரும் 28-ந் தேதி நடைபெற உள்ள பிரம்மாண்டமான பிரச்சார கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலினும், கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். 
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளராகிய பிரியங்கா காந்தி வரும் 27-ந் தேதி(நாளை மறுநாள்) தமிழகம் வர உள்ளார். அவர் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும், விஜய் வசந்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர்களும், கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக முதன்முறையாக தமிழகம் வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.