தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6-ந் தேதி கேரள, பாண்டிச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பாண்டிச்சேரியில் கடந்த மாதம் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி ராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போது அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 




இந்த தேர்தலில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. என். ஆர்.காங்கிரஸ் 16 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது. முன்னாள் முதல்வரான ரங்கசாமி இந்த தேர்தலில் ஏனாம் மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதையடுத்து, இன்று ஏனாம் தொகுதியில் ரங்கசாமி வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஏற்கனவே ரங்கசாமி தட்டாஞ்சாவடியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.