தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. 20 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலையும் ஏற்கனவே பா.ஜ.க. அறிவித்திருந்த நிலையில், தளி, உதகை மற்றும் விளவங்கோடு தொகுதிகளுக்கான பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் மட்டும் அறிவிக்கப்படாமலே இருந்தது.

Continues below advertisement



இந்த நிலையில், பா.ஜ.க. தலைமை இன்று வெளியிட்ட அறிவிப்பில் தளி தொகுதியில் நாகேஷ்குமாரும், உதகை தொகுதியில் போஜராஜனும், விளவங்கோடு தொகுதியில் ஜெயசீலனும் தமிழக பா.ஜ.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட உள்ளனர். விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ. விஜயதாரணி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.