விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நேமூர் பகுதியில் பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில கலந்துகொண்ட எச் ராஜா, கடந்த கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயர் இடம் பெற்றிருந்தது ஆனால் அப்போதும் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பட்ஜெட்டில் மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெயரும் இடம்பெற வில்லை அதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை என அர்த்தமில்லை. இரயில்வே திட்டங்களுக்கு 6,300 கோடி ஒதுக்கியுள்ளது. நாடு முழுதும் திட்டங்களின் பங்குதாரராக மத்திய அரசு உள்ளது.
காங்கிரஸ், திமுக பத்தாண்டு கூட்டணி ஆட்சியில் எட்டாயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் கடந்த பத்து ஆண்டில் 10 லட்சத்து 76ஆயிரம் கோடி கொடுத்துள்ளது. ஆளுநர் அறிவாளியாக இருப்பது திமுகவுக்கு பிரச்சினையாக உள்ளது. நேரடி வரி செலுத்துவோர் என்னிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. நாட்டின் வளர்ச்சி எந்த திசையில் செல்ல வேண்டும் என தீர்மானிப்பது தான் பட்ஜெட். நாட்டின் உள்கட்டமைப்புக்கு 11ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இடதுசாரிகள் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களில், நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திமுக போட்ட பிச்சை. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் 27 மாவட்டங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. அதற்காக 27 மாவட்டங்களை புறக்கணிப்பு என அர்த்தமா.
முத்ரா திட்டத்தில் அதிக கடன் பெற்றவர்கள் தமிழ்நாட்டினர். பெண்கள், குழந்தைகளுக்கு மூன்று லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஒன்றரை லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசி எல்லா திட்டங்களையும் பெற்று பயனடைந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் எப்படி நடந்துக்கொள்ளக்கூடாது என ராகுல்காந்தி செயல்பாடுகளை வைத்து தெரிந்துக்கொள்ளலாம். ராகுல்காந்திக்கு உடை நாகரிகம் இல்லை. நாடாளுமன்றத்திற்கு டிஷெட், ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வருகிறார். எதிர் கட்சிகள் நாடாளுமன்றத்தில் கண்ணியமில்லாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைக்கு ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் பேசும்போது எதிர் கட்சியினர் தொடர்ந்து சத்தம்போட்டுக்கொண்டு இருந்தனர். நாட்டில் ஜனநாயகம் எங்கே போகிறது. எதிர் கட்சியினருக்கு நாட்டை பற்றி கவலை இல்லை. அனகாரிக எதிர் கட்சியினரை மக்கள் தண்டிப்பார்கள். ஜனநாயகத்தில் மக்கள் பிரச்சினைகளை சபையில் பேசி கவனம் ஈர்க்க வேண்டும் அது ஜனநாயக கடமை ஆனால் அமைச்சர்கள், பிரதமர்கள் பேசும்போது அமைதியாக இருக்க வேண்டும். காங்கிரஸ், திமுக கட்சியினர் நாடாளுமன்றத்தில் அனாகரிமாக நடந்துக்கொள்கின்றனர்.
நீட் தேர்வு யார் கொண்டு வந்தது. நீட் தேர்வுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு கிடையாது. நீட் மசோதா கொண்டு வரும்போது திமுகவினர் அமைச்சராக இருந்தனர். ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் நீட் கொண்டுவரப்பட்டது. அனிதா தற்கொலை செய்துக்கொண்டார் என்பதற்காக நீட் தேர்வை ரத்து செய்ய சொல்லும் திமுக, கள்ளச்சாரயம் குடித்து 64 பேர் இறந்துள்ளனர் ஏன் ஸ்டாலின் மதுக்கடைகளை மூடவில்லை. ஆண்டுக்கு இரண்டு லட்சம் கோடிக்கு தமிழர்களை குடிக்க வைக்கிறது தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடை மட்டும் இல்லை, சந்து கடைகளும் உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள ஆட்சி விஷ சாராய ஆட்சி. திமுக தேர்தல் அறிக்கையில் மின் கணக்கீடு மாதமாதன் கொண்டு வருவோம் என கூறினார்கள். ஆனால் திமுக ஆட்சியில் 33 சதவீதம் மின் கட்டனம் உயர்த்தப்பட்டுள்ளது. முட்டாள் கூட்டத்தை உருவாக்கியது தான் திமுக. தமிழை வைத்து திமுகவினர் ஏமாற்றுவார்கள். மின் கட்டன உயர்வால் பல சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என கூறினார்கள் ஆனால் கொண்டுவரவில்லை.
இந்த மூன்று ஆண்டில் 3 லட்சம் கோடி கடன் வாங்கியிள்ளது. தமிழ்நாட்டின் மொத்த கடன் 8 லட்சத்து, 33ஆயிரம் கோடியாக உள்ளது. தமிழ்நாடு கடனில் முதலில் உள்ளது. தமிழ்நாட்டின் வருவாயில் பெரும் தொகையை வட்டியாக கட்டி வருகிறோம். தமிழகத்தைவிட உத்திரப்பிரதேசம் மூன்று மடங்கு மக்கள் தொகை உள்ளது ஆனால் அங்கு இவ்வளவு கடன் இல்லை. தமிழ்நாட்டின் எட்டு கோடி மக்களையும் அடமான வைக்கும் ஆட்சி திமுக ஆட்சி. திராவிட மாடல் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். 2026ல் திமுக ஆட்சி அகற்றப்படவில்லை என்றால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் அதலபாதாலத்திற்கு சென்று விடும். திமுக என்பது தீய சக்தி. ஊழல் பெரிச்சாலி கூட்டத்திற்கு விடைகொடுக்க வேண்டும். இவ்வாறு எச் ராஜா பேசினார்.