பஞ்சாப் மாநிலம் ஃபாசிலிகா மாவட்டத்தில் உள்ள ஜலாலாபாத்தில் சிரோமணி அகாலி தளம் கட்சியினருடன் ஏற்பட்ட மோதலின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி தலைவர் மீது துப்பாக்கிச் சூடு:
பஞ்சாப் மாநிலத்தில் வரவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுகிறார் மந்தீப் சிங் ப்ரார். இவர் நேற்று மனு தாக்கல் செய்வதற்காக சென்ற போது, அகாலி தளம் கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாவும், இறுதியில் மோதலாக மாறியதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இதையடுத்து, இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஆம் ஆத்மி வேட்பாளர் ப்ரார் மீது ஒருவருக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் தெரிவிக்கின்றன. இதையடுத், இந்நிலயில் மார்பில் குண்டு பாய்ந்ததில், காயம் அடைந்ததில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
ஆம் ஆத்மி குற்றச்சாட்டு:
இந்த சம்பவம் குறித்து பஞ்சாப் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் தருண்ப்ரீத் சிங் சவுந்த் தெரிவிக்கையில், ஆம் ஆத்மி தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்றும், வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பிடிபிஓ அலுவலகத்திற்குச் சென்றபோது, அகாலி தளத்தைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். "இது மிகவும் வெட்கக்கேடான சம்பவம், நாங்கள் கண்டிக்கிறோம்". அகாலி தளமும் காங்கிரஸும் பஞ்சாபில் அமைதியான சூழலை விரும்பவில்லை என்றும், பஞ்சாயத்து தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிக்கும் எவரையும் மிரட்டுவதாகவும் சவுந்த் குற்றம் சாட்டினார்.
விசாரணை:
காவல்துறையினரின் கூற்றுப்படி, ஷிரோமணி அகாலி தளத்தின் தலைவர் வர்தேவ் சிங் நோன்னி மான் மற்றும் பிற கட்சித் தொண்டர்கள் பிடிபிஓ அலுவலகத்திற்கு வந்த போது இரு குழுக்களிடையே மோதல் வெடித்தது, அங்கு ஆம் ஆத்மி கட்சியினரும் இருந்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மற்றொருவரும் காயமடைந்துள்ளார், அவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் , இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம் ஆத்மி மற்றும் அகாலி தள கட்சியினரிடையே ஏற்பட்ட இரு தகராறு வன்முறையாக மாறிய நிலையில், இதன் விளைவாக துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.